சென்னை: தி கோட் படத்தில் நடிகர் விஜய் 2 பாடல்கள் பாடியுள்ளார் என இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஒரு சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் தி கோட். இப்படத்திற்கு பின்னர் நடிகர் விஜய் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளார். அதன் பின்னர் நடிப்பை விடுத்து முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்து இருப்பதால், இப்படம் குறித்து ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தில் தான் விஜய்யும் வெங்கட் பிரபும் இணைந்துள்ளனர்.
இதில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்துள்ளார். சினேகா, லைலா, பிரேம்ஜி, வைபவ், நிதின் சத்யா, அஜ்மல், பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், யோகிபாபு என முக்கிய நட்சத்திங்கள் நடிக்கின்றனர். இவர்களுடன் த்ரிஷாவும் கேமியோ கேரக்டரில் நடிக்கிறார்.
இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மிகப்பெரிய பொருட் செலவில் தயாரித்து உள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறதாம். செப்டம்பர் 5ம் தேதி இப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் விஜய் 2 வேடத்தில் நடிக்கிறார். இப்படி பல்வேறு சிறப்புகள் இருப்பதால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இப்படத்தின் பல்வேறு அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. விசில் போடு என்ற பாடல் கடந்த மாதம் வெளியாகியது. இந்தப் பாட்டை விஜய்யே பாடியிருந்தார். அடுத்து மற்றுமொரு பாடல் வெளியாக உள்ளதாக இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா தெரிவித்துள்ளார். முதலில் வெளிவந்த பாடலை விட இந்த பாடல் சிறப்பானதாக இருக்க வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் விஜய் இந்தப் படத்தில் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளதாகவும் யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் செம ஹேப்பியாகியுள்ளனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}