சென்னை: தோனியால் தான் என் மகனின் வாழ்க்கை அழிந்து விட்டது. தோனியை மன்னிக்கவே மாட்டேன் என கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தந்தையான யோக்ராஜ் ஆவேசமாக கூறியுள்ளார்.
இந்தியா கிரிக்கெட் அணியில் முக்கிய போட்டியாளர்களாக இருந்தவர்கள் தான் யுவராஜ் சிங் மற்றும் தோனி. இருவரும் இணைந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி இந்திய அணிக்காக மகத்தான சாதனை படைத்துள்ளனர். அதனை மறுக்கவே முடியாது. கடந்த 2007ல் டி20 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் ஆறு சிக்சர்களை ஒரே ஓவரில் விளாசிய போது மறுமுனையில் இருந்தவர் தோனி. இவர்கள் இருவரும் ஆரம்ப கால கிரிக்கெட் கேெரியரில் எதிர் எதிர் அணிகளில் விளையாடியவர்கள். இவ்விருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. அது அவ்வப்போது வெளிப்பட்டு சர்ச்சையாகவும் மாறி தருணங்களும் உண்டு.
ஒரு கட்டத்தில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் யுவராஜ் சிங். இதன்பின்னர் இந்திய அணியில் அவருக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. இதற்குக் காரணம் தோனிதான் என்பது யுவராஜ் சிங்கின் தந்தையான யோக்ராஜின் குற்றச்சாட்டு. பலமுறை தோனியை விமர்சித்துள்ளார். இப்போது மீண்டும் ஒருமுறை தோனியை அவர் விமர்சித்துள்ளார்.
இது குறித்து யோக்ராஜ் சிங் கூறுகையில், என் வாழ்நாளில் ஒருபோதும் தோனியை நான் மன்னிக்கவே மாட்டேன். அவர் தனது முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும். அவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர். ஆனால், எனது மகனுக்கு எதிராக அவர் செய்த அனைத்தும் இப்போது வெளி வருகிறது. என்னிடம் தவறு செய்தவர்களை நான் மன்னிக்க மாட்டேன்.
தோனி எனது மகனின் வாழ்க்கையையே அழித்து விட்டார். யுவராஜ் சிங் இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் விளையாடி இருப்பார். யுவராஜ் சிங் போன்ற ஒரு மகனை முடிந்தால், நீங்கள் பெற்று எடுங்கள். கவுதம் கம்பீர் மற்றும் வீரேந்தர் சேவாக்கூட இதற்கு முன் 'இன்னொரு யுவராஜ் சிங் நமக்கு கிடைக்க மாட்டார்' எனக் கூறி இருக்கின்றனர்.
புற்றுநோயுடன் விளையாடிய 2011ஆம் உலகக் கோப்பை வென்று கொடுத்த அவருக்கு இந்திய அரசு, பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கூறியுள்ளார். கூடவே முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவையும் விமர்சித்துள்ளார் யோக்ராஜ்.
யோக்ராஜ் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். சமீபத்தில்கூட சச்சின் டெண்டுல்கர் மகனுக்கு இவர் பந்து வீச்சுப் பயிற்சி கொடுத்தார் என்பது நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}