சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்!

Mar 08, 2025,01:44 PM IST

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டப்பட்டது. இவ்விழாவில் ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை சார்  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாந்தி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசுகையில், அம்மாதான் உங்களின் முதல் ஆசிரியர். ஆசிரியர் தான் உங்களின் அடுத்த அம்மா என்ற வரிக்கு ஏற்ப ஆசிரியர்கள் மாணவர்களை அழகாகவும் நல்ல முறையிலும் இப்பள்ளியில் வளர்க்கிறார்கள். 

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்