- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed
தேசிய உழைக்கும் அம்மாக்கள் தினம் என்று அம்மாவிற்கு மட்டும் சிறப்பா என்று கேட்கிறீர்களா?
ஆண்களும், பெண்களும் சரிசமமாக வேலைக்கு சென்றாலும் வீட்டு வேலை முழுமையாக செய்து விட்டு பெண்கள் வேலைக்கு செல்வதால் இன்றைய தினம் சிறப்பாக அவர்களுக்கு கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 12 அன்று தேசிய உழைக்கும் அம்மாக்கள் தினம் (National Working Moms Day) கொண்டாடப்படுகிறது. பணி மற்றும் குடும்பம் இரண்டையும் திறம்பட நிர்வகிக்கும் தாய்மார்களின் அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் சமூகத்திற்கு அவர்கள் அளிக்கும் முக்கிய பங்களிப்பை அங்கீகரித்து, பாராட்டுவதற்கு இந்நாள் கொண்டாடப்படுகிறது.

அம்மாக்கள் குடும்பத்தின் முதுகெலும்பாக இருக்கிறார்கள். வேலை மற்றும் வீட்டுப் பொறுப்புகளை சமமாக மேற்கொள்வது பெரிய சாதனையாகும். உழைக்கும் அம்மாக்கள் குழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்கள். அவர்கள் கடின உழைப்பால் குடும்பத்தின் பொருளாதாரம் வலுப்பெறுகிறது. சமுதாய வளர்ச்சிக்கும் பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதை உணர்ந்து ஒவ்வொரு பெண்களும் சிறப்பாக செயல்படுகிறார்கள் .
இந்த நாள் பெண்களின் உழைப்பை பாராட்டும் நாளாக கருதப்படுகிறது. உழைக்கும் அம்மாக்கள் நேர மேலாண்மையில் சிறந்தவர்களாக காணப்படுகிறார்கள். அவர்கள் குடும்பத்தையும் தொழிலையும் சிறப்பாக நடத்துகிறார்கள். சமூகத்தில் பெண்களின் மதிப்பை உயர்த்தும் தினமாக கருதப்படுகிறது.
அம்மாக்களின் உழைப்பை மதிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். மேலும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நல்ல வாய்ப்பாக இந்த நாளை சிறப்பாக கொண்டாடுவோம். குடும்பமும் சமூகமும் முன்னேற அம்மாக்களின் பங்கு மிகப் பெரியது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து பார்க்க வேண்டும் .
வேலை செய்து குடும்பத்தை கவனிக்கும் அம்மாக்களின் அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்து அவர்களுக்கு நன்றியை தெரிவிப்போம். இந்த நாள் அம்மாக்களின் தியாகத்தை நினைவுபடுத்துவதோடு,குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அம்மாக்கள் பல சிரமங்களை தாங்குகிறார்கள் என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும். வேலை செய்யும் அம்மாக்களுக்கு குடும்ப ஆதரவு மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுங்கள்.
(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள் போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!
சர்வதேச சுடோகு தினம் .. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டு!
"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!
சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்
{{comments.comment}}