திருச்சி விமான நிலைய விழாவில் ஆங்கிலத்தில் பேசி வந்த பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் இந்தியில் பேசத் தொடங்கினார். அவரது பேச்சு மொழிபெயர்ப்பாளர் மூலம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் கேப்டனாக திகழ்ந்தவர் விஜயகாந்த். தேசிய நலனுக்கு முன்னுரிமை கொடுத்தவர் விஜயகாந்த். அவருக்கு எனது அஞ்சலிகள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
விமான நிலைய முனையத்தில் நடந்த விழாவில், ரூ. 20,140 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. திருச்சி- கல்லகம் இடையேயான நான்கு வழி சாலை, செட்டிகுளம்- நத்தம் இடையே நான்கு வழி சாலை, காரைக்குடி- ராமநாதபுரம் இடையே இரு வழிச்சாலையும் நாட்டுக்கு அர்பணித்தார்.
திருச்சி விமான முனைய திறப்பு விழாவில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது பிரதமருக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். அப்போது விழாவுக்கு அழைத்து வரப்பட்டிருந்த பாஜகவினர் பலத்த கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில் பெருமளவில் பாஜகவினர் அழைத்து வரப்பட்டிருந்ததால் முதல்வர் பேச்சின்போது சலசலப்பு ஏற்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 1100 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய. முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். விமான முனையம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, பிரதமருக்கு விளக்கினார். நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர். என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அமைச்சர் டிஆர்பி ராஜா, மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை முடித்துக் கொண்டு திருச்சி விமான நிலையம் திரும்பினார் பிரதமர் நரேந்திர மோடி. அங்கு ரூ. 1100 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.
பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசும்போது வணக்கம் என்று கூறி ஆரம்பித்தார். அதன் பின்னர் தனது உரையின்போது இடை இடையே "எனது மாணவக் குடும்பமே".. "அப்றம் என்னாச்சு" என்று தமிழும் கலந்து பேசினார்.
2024ம் ஆண்டில் நான் உரையாற்றும் முதல் பொது நிகழ்ச்சி திருச்சியில்தான் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசும்போது இதைத் தெரிவித்தார்.
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
எழுதுகிறேன் என் மனதை (கடிதக் கவிதை)
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
Kodumudi Brahma temple: கொடுமுடி பிரம்மா சன்னதியும், வன்னி மரத்தின் சிறப்புகளும்!
நேபாளத்தில் ஓயாத அமளி.. அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜினாமா.. அரசு கவிழ்கிறதா?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
தொடர் புதிய உச்சத்தில் தங்கம் விலை... கிடுகிடு வென உயர்ந்து சவரன் ரூ.81,000த்தை கடந்தது!