
ஏப்ரல் 19,வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார். தனியார் நிறுவனங்களுக்கும் உத்தரவிட தொழிலாளர் நல ஆணையத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தேர்தல் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஏப்ரல் முதல் வாரம் தமிழ்நாட்டில் நடைபெறும் இரண்டு பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று பேச இருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தருமபுரி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று தருமபுரியில் உள்ள அதியமான் கோட்டை காலபைரவர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்ததை கண்டித்து பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தை முற்றுயிட முயன்ற ஆம் ஆத்மியினரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தப் போராட்டத்தை தொடர்ந்து டெல்லி பட்டேல் சௌக் மெட்ரோ ரயில் நிலைய பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
மதிமுகவுக்கு பம்பர சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று பிற்பகல் 2:15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பஞ்சாபில் சிரோன்மணி அகாலி தளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாஜக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இதில் பாஜகவின் நிபந்தனைகளை சிரோன்மணி அகாலிதளம் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளிலும் பாஜக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் ஏக்நாத் சிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பாஜக, ஒடிசாவில் பிஜு ஜனதா தளத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது தோல்வியில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை அடுத்தடுத்து தோல்வி அடைந்து வருவதால் அக்கட்சியின் மேலிடம் அதிர்ச்சி அடைந்து வருகிறதாம்.
ஊட்டியில் தேர்தல் விதிமுறைகளை மீறி ஊர்வலம் சென்றதாக பாஜக மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், அதிமுக மாவட்ட செயலாளர் வினோத் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து தூத்துக்குடி காமராஜர் காய்கறி சந்தையில் இன்று காலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் முதல்வர் மு க ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் ராமநாதபுரம் வேட்பாளர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நவாஸ் கனிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார். இதனை முடித்துவிட்டு விருதுநகர் செல்ல இருக்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின்.

தூத்துக்குடியில் அதிமுக சார்பாக போட்டியிடும் சிவகாமி வேலுமணிக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4 மணிக்கு சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!