சென்னை: மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. இதனால் சுயேச்சை சின்னத்திலேயே மதிமுக வேட்பாளர் துரை வைகோ போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு இந்தப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

திமுக கூட்டணியினருடன்.. ஊர்வலமாக போய் திருவள்ளூர் தனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மனுத் தாக்கல் செய்தார்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையிலிருந்து உத்தரவு பிறப்பித்துள்ளதால் தற்போது அவருக்கு எதிராக வழக்குத் தொடர்கிறது மத்திய அரசு. மத்திய பாஜக அரசு டெல்லியை அழிக்க முயல்கிறதா என்று கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களில் 33 பேரை மட்டும் விடுதலை செய்த இலங்கை கோர்ட், 3 பேருக்கு சிறைத் தண்டனை விதித்துள்ளது. 2 பேருக்கு தலா 6 மாத சிறைத் தண்டனையும், இரண்டாவது முறையாக கைதான ராமேஸ்வரம் மீனவருக்கு மேலும் ஒரு வருடம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. அவர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர். 6 மாத சிறைத் தண்டனைக்குள்ளானவர்களில் ஒருவர் ராமேஸ்வரம், இன்னொருவர் காரைக்காலைச் சேர்ந்தவர்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அவருடன் இருந்தனர்.

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறி விட்டது. இதன் காரணமாக திருச்சியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ, வேறு ஒரு சின்னத்தில்தான் போட்டியிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!