அம்மாவுக்குள் இருந்த ஏக்கம்.. அவருக்கும் சேர்த்து வட்டியும் முதலுமாக மேடையில் கலக்கும் தன்யா!

Oct 11, 2025,12:57 PM IST

சென்னை: அம்மாவுக்கு மேடை ஏறி நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அவருக்குள் இருந்த தயக்கம், பயம் அதைத் தடுத்து விட்டது. அவரையே முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு அவருக்கும் சேர்த்து நான் சாதித்து வருகிறேன் என்று பெருமிதமாக கூறுகிறார் 10 வயதேயான ச. தன்யா பாப்பா.


தன்யா சேலம் மாவட்டம் சன்னியாசி குண்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். சேலம் ராயல் பார்க் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். டான்ஸில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் விளையாட்டு, பாடல், பேச்சுப் போட்டி என எல்லாவற்றிலும் ஒரு கை பார்க்கிறார்.


எப்படிடா இப்படி அசத்துறே பாப்பா என்று தன்யாவிடமே கேட்டோம்.. அதற்கு அவருக்கே உரித்தான அந்த அட்டகாசமான புன்னகையுடன் பொறிந்து தள்ளி விட்டார் தன்னைப் பற்றிக் கூறி.. இனி ஓவர் டூ தன்யா!




"என் பெயர் தன்யா. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கின்றேன். சேலத்தில் உள்ள சன்னியாசி குண்டில் சிறிய கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் குடும்பம் கூட்டுக் குடும்பம். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி. கொள்ளுப் பாட்டி எல்லாரும் உள்ளார்கள்.


நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது பேச்சு போட்டி பாட்டுப் போட்டி விளையாட்டு பல போட்டிகள் உள்ளன. எல்லாப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளேன். பல வெற்றிகளை , கூடவே தோல்விகளையும்  கண்டு உள்ளேன். 


எனக்கு என் அம்மா தான் என் முன் உதாரணம். என் அம்மா ஒரு மேடை கூட ஏறுனது இல்லையாம்.  ஏன் என்று கேட்டேன். பயம் என்று கூறி பல நிகழ்வுகளையும் சொல்லி உள்ளார்கள். அதில் இருந்து  கற்றுக்கொண்ட பாடம் தான். எல்லா மேடைகளும் ஏற வேண்டும் என்று எனக்குள் எண்ணம் வந்தது.




பேச்சுப்போட்டி, பாட்டு போட்டி, ஓவியம் வரைதல், திருக்குறள் போட்டி என, பிறகு  விளையாட்டு என எதையும் விடுவதில்லை. எல்லாவற்றிலும் இறங்கி ஒரு கை பார்த்து விடுவேன். பல சாதனைகளும் புரிந்துள்ளேன். 


கல்வி என்பது தேர்வில் வெல்வது மட்டுமல்ல, பிறருக்கு உதவுவதிலும் இருக்கிறது என்பதை கற்றுக் கொண்டேன். கல்வியில் நாம் சந்திக்கும் தோல்விகள், வெற்றியின் முடிவு அல்ல. அவை நம்மை மேலும் மேலும் முன்னேற்ற உதவும்.  நாம் கற்றுக்  கொண்டதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் நம்முடைய திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம் என்று என் பெற்றோர்களும் ஆசிரியர்களும் சொல்லி உள்ளார்கள்.


தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் எந்த சவாலையும் எதிர்கொள்ளலாம். அப்புறம், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் அமைப்பின் மூலம் பல திறமைகளை வெளிப்படுத்தியுள்ளேன். அவர்கள் நடத்திய பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு 33 சான்றிதழ்களும் பெற்றுள்ளேன்.


என் பெற்றோர்களுக்கும் இந்த வாய்ப்பை கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று கூறி பெருமிதத்தோடு சொன்னார் தன்யா.


உண்மையில் தன்யாவைப் பாராட்டும் அதே வேளையில் அவரை இந்த அளவுக்கு மோல்டு செய்து மெருகேற்றி ஜொலிக்க வைத்த அவரது பெற்றோருக்கு குறிப்பாக அவரது தாயாருக்கும் மிகப் பெரிய சல்யூட் கொடுக்க வேண்டும். தன்யா, மேலும் மேலும் அசத்துங்க, நிறைய வெற்றிகளைத் தட்டிக் கொண்டு வாங்க.. உலகம் முழுக்க புகழுடன் வலம் வாங்க.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்