சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் வெளியாகி உள்ள நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் சென்னை மாவட்டம் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 4,107 மையங்களில் கடந்த மார்ச் 26 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கப்பட்டு ஏப்ரல் 28ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்தில் 94 ஆயிரத்து 264 தேர்வு எழுதிய நிலையில், இதில் 8 லட்சத்தி 18 ஆயிரத்து 743 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோல கடந்த மே 6ஆம் தேதி திங்கட்கிழமை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் சென்னை மாநகராட்சி பள்ளிகள் ஒட்டு மொத்தமாக 87.13 சதவீதம் தேர்ச்சி விகிதத்தைபெற்றன.
கடந்த சில வருடங்களாகவே தேர்ச்சி விகிதத்தில் சென்னை மாவட்டம் தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. நடப்பாண்டில் நடந்த பொதுத் தேர்வில் சென்னை வழக்கம் போல பின் தங்கிய நிலையில் உள்ளது. ஒரு காலத்தில் சென்னை தான் டாப்பில் இருக்கும். எப்பப் பார்த்தாலும் சென்னையே டாப்பில் வருகிறதே என்று மற்ற மாவட்டத்துக்காரர்கள் புலம்பும் அளவுக்கு நிலைமை இருந்தது. இந்த நிலையை முதலில் உடைத்தது விருதுநகர் மாவட்டம்தான். தொடர்ந்து பல வருடங்களாக விருதுநகர்தான் டாப்பில் இருந்து வந்தது. தற்போது அந்த நிலையும் மாறியுள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் தான் பின் தங்கிய நிலையில் இருக்கும். ஆனால் தற்போது டாப் லிஸ்டில் முதலிடத்தை பிடித்துள்ளார்கள். மிகவும் வளர்ந்த மாவட்டமான சென்னைக்குப் பின்னுக்குப் போயுள்ள நிலையில், மிகவும் பின்தங்கிய அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் மாவட்டங்கள் டாப்பில் வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு என்ன காரணம். அங்கு மாணவர்களுக்கு நல்ல முறையில் கற்றல் திறன் மேம்படுத்தப்பட்டதா அல்லது படிப்பின் நிலை அறிந்து மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்களா.. என பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
இந்த வருடம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் தேர்ச்சி விகிதத்தில் பின் தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை 88.21% சதவீதம், அதனை ஒட்டிய மாவட்டங்களான செங்கல்பட்டு 87.38%, காஞ்சிபுரம் 87.55%, திருவள்ளூர் 86.52 என தேர்ச்சி விகிதம் 90 சதவிகிதத்திற்கும் கீழே உள்ளன.
தர்மபுரி மாவட்டத்தை விட சென்னையும் அதன் அருகாமை மாவட்டங்களும் பின்தங்கியுள்ளன. சென்னை பள்ளிகளுக்கு ஏன் என்ன ஆச்சு .. சென்னை ஏன் வருடா வருடம் பின்தங்கிய நிலையில் செல்கிறது.. அவர்களுக்கு போதுமான போதனை வழங்கவில்லையா.. அல்லது மாணவர்களுக்கு வேறு ஏதும் ஏதேனும் டிஸ்டிராக்ஷன் இருக்கிறதா.. இது ஆராயப்பட வேண்டியது. இத்தனைக்கும் சென்னையில் ஏராளமான பள்ளிகள் உள்ளன, சிறந்த ஆசிரியர்களும் உள்ளனர். மாணவர்களும் சிறப்பாகவே படிக்கிறார்கள். ஆனாலும் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து சரிவது கவலைக்குரியது. அரசும், ஆசிரியர்களும் இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}