12 மணி நேர வேலை அமைச்சர்கள் செய்கிறார்களா?.. ராஜேஸ்வரி பிரியா அதிரடி கேள்வி

Apr 23, 2023,02:18 PM IST
சென்னை:  12 மணி நேர வேலை திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்வைத்துள்ளது. முதலில் இதை அமைச்சர்கள் செய்கிறார்களா என்று  அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் மூ. ராஜேஸ்வரி பிரியா கேட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு 12 மணி நேர வேலை திட்டத்தை மசோதாவாக கொண்டு வந்து சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது. இது பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது. இந்த சட்டம் தொழிலாளர்களுக்கு விரோதமானதாகும். எனவே இதை அமல்படுத்தக் கூடாது என்று திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில் அனைத்து மக்கள் அரசியல் கட்சியன் தலைவரான மூ. ராஜேஸ்வரி பிரியா ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில்,  வெளிநாட்டு நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வரவேண்டுமென்றால் நீங்கள் (திமுக)அவர்களிடம் வாங்கும் கமிஷன் சதவீதத்தை குறைத்து கொள்ளுங்கள். அதனை விடுத்து உழைப்பு சுரண்டல் செய்து கொள்ள உடந்தையாக இருப்பது எந்த விதத்தில் நியாயம்?

தொழிலாளர்களை 12 மணி நேர வேலை பார்க்க வைத்து இயந்திரமாக மாற்றி இளவயது மரணங்களை அதிகபடுத்துவதனையும், குடும்பத்தினை கவனிக்க முடியாமல் குடும்பங்கள் சீரழிவதையும் கண்டு ரசிப்பதுதான் திமுகவின் திட்டமா? 




மற்றும் பிற மாநிலத்தவருக்கு வேலை வாய்ப்பை அதிகப்படுத்தும் திட்டமாக அமையும் , ஏனென்றால் குடும்பத்துடன் இருப்பவர்களால் 12 மணி்நேரம் வேலை பார்க்க முடியாது. விருப்பமுடையவர்கள் வேலை பார்க்கலாம் என்பதெல்லாம் என்ன ஜாலம். எந்த நிறுவனம் தொழிலாளி விருப்பபடி வேலை கொடுக்கும்?

மக்களை பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக வேறு வேறு  காரணங்களை காட்டி மக்களை ஏமாற்ற வேண்டாம். 12 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை பார்த்தால்தான் தமழ்நாட்டில் முதலீடு செய்வோம் என்று கூறும் எந்த நிறுவனமும் தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை.

மக்களை பலி கிடாவாக்கி விருந்து உண்ண நினைக்கும் உங்கள் சட்ட திருத்தத்தினை திரும்பபெற வேண்டுமென்று அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் சார்பாக கோரிக்கை வைக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்