"8, 8ஆ பிரிச்சு வச்ச மனிதகுலம்".. 12 மணி நேரத்தை ஏற்க முடியாது.. வலுக்கும் எதிர்ப்பு!

Apr 22, 2023,09:14 AM IST
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

"ஒரு நாளின்  24 மணி நேரத்தை உழைப்பு, ஓய்வு, உறக்கம் என மூன்று சமபங்காக பகுத்ததே மனிதகுல வரலாற்றின் மகத்தான ஜனநாயக நடவடிக்கை. எந்த காரணம் சொல்லியும் இந்த சமனை குலைப்பதை ஏற்கவியலாது. தமிழ்நாடு அரசு சட்டத்தை திரும்ப பெற வேண்டும".. இது மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.சு. வெங்கடேசனின் கருத்து.



2020ம் ஆண்டு தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கக் கூடாது என்று கோரி அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இன்று மு.க.ஸ்டாலின் முதல்வராக இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளார்.

ஏன் இந்த முரண்பாடு.. நடந்தது என்ன...?

தொழிலாளர்களின் பணி நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிப்பது என்பது மத்திய அரசின் திட்டமாகும்.  இதுதொடர்பாக மத்திய அரசு   ஒரு சட்டம் கொண்டு வந்தது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்.

- பணியாளர்கள் வாரம் 3 நாட்கள் ஆஃப் எடுத்துக் கொள்ளலாம்.
- அவர்களின் வாராந்திர பணி நேரம் என்பது 48 மணி நேரமாக இருக்கும்.
- தினசரி 8 மணி நேரம் வேலை பார்ப்போருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறையாக இருக்கும்.
- தினசரி 12 மணி நேரம் வேலை பார்ப்போருக்கு வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறையாக இருக்கும்.
- தினசரி 9 மணி நேரம் வேலை பார்க்க விரும்புவோருக்கு வாரத்திற்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
- ஒரு பணியாளர் வேலையிலிருந்து விடுவிக்கப்படும்போது அவருக்கான பைனல் செட்டில்மென்ட் தொகையானது 2 பணி நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.
- பெண் பணியாளர்களுக்கு பிரசவ கால விடுமுறையானது 26 வாரங்களாக அதிகரிக்கப்படும்.
- பெண்களை இரவு நேரப் பணியில் அமர்த்த வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட பெண் பணியாளர்களின் ஒப்புதல் முன்பே பெறப்பட வேண்டும்.
- நிறுவனங்களில் பெண் பணியாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் பிற வசதிகள் முறையாக செய்திருக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற முக்கியமான அம்சங்கள் இந்த சட்டத் திருத்தத்தில் இடம் பெற்றன. இந்த சட்டத்தை இதுவரை 23 மாநிலங்கள் ஏற்றுக் கொண்டு தங்களது சட்டசபையில் தொழிலாளர் நல சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளன. அந்த வரிசையில் தற்போது தமிழ்நாடு சட்டசபையும் இந்த மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. 

இதுதான் சர்ச்சையாகியுள்ளது. இப்போது முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது 12 மணி நேர வேலை நேரம் என்பதை  கடுமையாக எதிர்த்து வந்தார். ஆனால் தற்போது அவரே அதை சட்டமாக்கும் மசோதாவைக் கொண்டு வந்துள்ளது தொழிலாளர் நல விரோதப் போக்கு என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  அதேசமயம், திமுகவிலேயே கூட இந்த சட்ட மசோதா குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. சிலர் இந்த சட்ட மசோதா தேவையற்றது. பாஜக கொண்டு வந்த சட்டம் இது. இதை பாஜக ஆளும் மாநிலங்கள்தான் ஏற்றுள்ளன. பாஜக அல்லாத அரசு ஒன்று இதை ஏற்றிருப்பது தமிழ்நாடு மட்டும்தான். இதனால் திமுகவுக்கு தேவையில்லாத கெட்ட பெயர் ஏற்படும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமல்லாமல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அதிமுக, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவையும் கூட இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தப் பிரச்சினையை திமுக எப்படி சமாளிக்கப் போகிறது என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!

news

திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!

news

மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

news

அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்

news

பாமக ராமதாஸ் கையெழுத்தே பொய்யா? பகீர் கிளப்பிய வக்கீல்... என்னதான் நடக்கிறது?

news

தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!

news

த.வெ.க நிர்வாகிகள் கூட்டம்... பொதுமக்களுக்கு அனுமதியில்லை... காவல்துறை அறிவிப்பு!

news

இந்தியா பாகிஸ்தான் மோதலும்.. வரிவிதிப்பை "டிரம்ப் கார்டாக" பயன்படுத்தினாரா அமெரிக்க அதிபர்?

news

எனக்கு வாசனையும் தெரியாது, சுவையும் தெரியாது : மம்முட்டி ஓபன் டாக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்