காஸியாபாத்: உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் 12 வயது சிறுவன் ஒருவன், முதிய தம்பதியை திட்டமிட்டுக் கொன்று, கொள்ளையடித்த செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
12 வயது பையனுக்கு இப்படி ஒரு கிரிமில் புத்தியா என்று பலரும் அதிர்ந்து போயுள்ளனர். காஸியாபாத்தில் நடந்த இந்த சம்பவத்தால் உத்தரப் பிரதேசமே விக்கித்துப் போயுள்ளது.
காஸியாபாத்தில் வசித்து வந்தவர் 60 வயதான இப்ராகிம். இவர் பழைய இரும்புப் பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். இவரும், இவரது மனைவி ஹஸ்ராவும் நவம்பர் 22ம் தேதி இவர்களது வீட்டு வளாகத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். இருவரும் டாய்லெட்டுக்கு அருகே வீட்டுக்கு வெளியே இவர்களது உடல்கள் கிடந்தன. கழுத்தில் துணியைச் சுற்றி இறுக்கி இருவரையும் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
விசாரணையில் இறங்கிய போலீஸாருக்கு முதலில் சரியான துப்பு கிடைக்கவில்லை. ஆனால் தீவிர விசாரணையில் அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இந்த துணிகர கொலையில் ஈடுபட்டது வெறும் 12 வயதேயான சிறுவன் என்று தெரியவந்து மலைத்துப் போய்விட்டனர். இந்த சிறுவன், கொலை செய்யப்பட்ட தம்பதிக்கு ஏற்கனவே தெரிந்த பையன்தான்.
இப்ராகிடமும் நிறைய பணம், நகை இருப்பதை அறிந்து அந்த சிறுவன் அதை கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளான். இதற்காக தன்னைப் போன்ற சிலரை கூட்டு சேர்த்துக் கொண்டு கொள்ளையடிக்க முயன்றுள்ளான். அது வெற்றி பெறவில்லை. இதையடுத்து அவர்களைக் கொலை செய்ய அந்த சிறுவன் முடிவு செய்துள்ளான். இதுதொடர்பாக மஞ்ஜேஷ், சிவம் , சந்தீப் ஆகியோரை அணுகியுள்ளான். அவர்களும் ஒப்புக் கொள்ளவே, திட்டமிட்டு கொலைசெய்துள்ளனர். கொலை செய்த பின்னர் வீட்டில் இருந்த பணம், மொபைல் போன், நகை ஆகியவற்றைத் திருடியுள்ளனர்.
தற்போது அந்த சிறுவன், மஞ்ஜேஷ், சிவம் ஆகியோரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். சந்தீப் இன்னும் சிக்கவில்லை.
இங்கிலாந்து சென்று தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்க போகிறேன்: முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்!
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க.. திமுக கையில் இருக்கும் 4 மேட்டர்!
டிரம்ப் வரியால் விபரீதம்..பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு..2 நாட்களில் ரூ. 9.69 லட்சம் கோடி இழப்பு
அதிரடியாக ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை... சவரன் 76,000த்தை கடந்தது!
திராவிட அரசு பொய்யான, மோசடியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது: அன்புமணி!
கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்: பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!
விஷால்- சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்...பிறந்தநாளில் எளிமையாக நடந்தது
திமுக - தேமுதிக கூட்டணிக்கு வேட்டு வைக்குமா.. தனலட்சுமி சீனிவாசன் கிட்னி முறைகேடு விவகாரம்?
Pillaiyar: விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வந்தது எப்படி?
{{comments.comment}}