சென்னை: தேமுதிகவுக்கு 14 நாடாளுமன்றத் தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா சீட்டையும் தரும் கூட்டணியில் இணைய வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளனர். இதன் அடிப்படையில் நாங்கள் பேசப் போகிறோம் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்குப் பின்னர் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மறைந்த கேப்டன் விஜயகாந்த்துக்கு கூட்டத்தில் அஞ்சலி செலுத்தினோம். 9 தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. கேப்டன் கோவிலை அனைத்து மக்களும் எப்போதும் வந்து தரிசிக்கக் கூடிய அளவுக்கு கோவிலாக உருவாக்கவுள்ளோம். வள்ளல் விஜயகாந்த் நினைவு அறக்கட்டளை மூலம் அன்னதானம் தொடரும். இதுதவிர மேலும் பல உதவிகளையும் வழங்கவுள்ளோம்.
கேப்டன் இறுதிப் பயணத்தில் நேரடியாகவும், பல்வே விதமாக வந்து அஞ்சலி செலுத்திய அனைவருக்கும், அரசு, முதல்வர், கவர்னர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், கலைத்துறையினர், கழக நிர்வாகிகள், தொண்டர்கள், தமிழர்கள், அவரை மனதில் வைத்திருக்கும் அனைவருக்கும் நன்றிகள்.
மா.செக்கள் வைத்த 2 கோரிக்கை
இன்றைய கூட்டத்தில் பல்வேறு கூட்டணிகள் குறித்து விவாதித்தோம். தனித்துப் போட்டியிட பலரும் வலியுறுத்தியுள்ளனர். அதேசமயம், 14 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபாவும் தரும் கூட்டணியில் இணைய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அதுவே இப்போது இறுதியாக வலியுறுத்தியுள்ளனர். இறுதி முடிவு இது.
கட்சிப் பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டோம். கூட்டணி தொடர்பான தேர்தல் பணிகளை தொடங்கவுள்ளோம். தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
கூட்டணி தொடர்பாக இதுவரை யாரும் நேரடியாகவோ மறைமுகவோ எங்களுடன் பேசவில்லை. இனிமேல்தான் பேசப் போகிறோம்.
கொள்கையைப் பற்றி கேட்காதீங்க
தேமுதிகவிடம் கொள்கை, சித்தாந்தம் குறித்து திரும்பத் திரும்ப கேட்காதீர்கள். யாரிடமும் இல்லாத சித்தாந்தம், கொள்கை எங்களிடம் உள்ளது. எங்களை விடவா மத்தவங்க கிட்ட கொள்கை இருக்கு. அதை முதலில் தெரிஞ்சுக்கங்க. இப்படிப் பேசிப் பேசித்தான் கேப்டனை ஒன்றும் இல்லாமல் செய்து விட்டீர்கள். அவரைப் போல ஒரு நல்ல மனிதன் இனி பிறக்கப் போவதில்லை என்று சற்று ஆவேசமாக பேசினார் பிரேமலதா விஜயகாந்த்.
விஜய் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அவருக்கு எனது வாழ்த்துகள் என்று கூறினார் பிரேமலதா விஜயகாந்த்.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}