ஈரோடு: டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை என்று தவெக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கரூர் பிரச்சாரத்திற்கு பின்னர் தற்போது மீண்டும் மக்கள் சந்திப்பு பயணத்தை தவெக தலைவர் விஜய் தொடங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஞ்சிபுரத்தில் உள்ளரங்கு கூட்டத்தில் மக்களை சந்தித்த விஜய், அதன்பின்னர் புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தை நடந்தியிருந்தார். அதன்பின்னர் தற்பொழுது தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்த ஈரோடு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தவெக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையில் ஈரோட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் செங்கோட்டையன் பேசுகையில், ஈரோடு அருகே விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் சரளை என்ற இடத்தில் விஜய்யின் பிரச்சாரம் நடக்கவுள்ளது. இதற்காக 19 ஏக்கர் பரப்பரளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வரும் 18ம் தேதி தவெக தலைவர் விஜய் ஈரோடு வருகிறார். காலை 11 மணியில் இருந்து 1 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். அரசு அதிகாரிகள் ஆலோசனைகளைக் கேட்டு இந்த நிகழ்ச்சியை நடத்த இருக்கிறோம். புதுச்சேரிக்குப் பிறகு, முதல்முறையாக தமிழகத்தில் பிரசாரம் செய்ய இருக்கிறார். ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடத்த தவெகவிற்கு எந்த தடையும் இல்லை.

விஜய் தான் வரும் கால முதல்வர் என்பதை ஏற்றுக்கொண்டு, கட்சியில் இணைய வருபவர்களை வரவேற்போம் உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நேற்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டணியில் யாரை சேர்க்க வேண்டும் என்பதை தலைவர் தான் முடிவு செய்வார். நேற்றைய கூட்டத்தில் தவெகவில் பல பேர் இணையும் வாய்ப்பு இருக்கிறது என்று தான் சொன்னேன். தவெக அதிமுகவாக மாறும் என்று நான் சொல்லவில்லை. அனைவரையும் இணைப்போம், அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்.
அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. அது தனி. இப்போது நான் முழு விருப்பத்தோடு தவெகவில் இணைந்து விட்டேன். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலேயே உயர்மட்ட குழு வரையில் இருந்தவன். அதிமுகவில் எப்படி இருத்தேனோ, அதை போலவே தவெகவிலும் இருக்கிறேன். கடுமையாக உழைக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.யாருடன் கூட்டணி, எந்தக் கட்சிகளை சேர்க்கலாம் என்பதை எல்லாம் விஜய் தான் முடிவு செய்வார். தற்போது தவெக பொதுக்கூட்ட ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}