குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

Dec 12, 2025,04:59 PM IST

சென்னை: புதிய பாரதிய நியாய சமிதா பிரிவு 85ன் படி கணவர் அல்லது அவரது உறவினர்கள் குடித்து விட்டு வந்து மனைவியை திட்டினாலே இனி ஜெயில் தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் மது ஒழிக்க பட வேண்டும், போதை பொருட்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று தினம் தினம் ஆங்காங்க போராட்டங்கள் நடந்து வருகிறது. போராட்டங்கள் அதிகமாக நடக்கிறதோ இல்லையோ, குற்றங்கள் கணக்கிட முடியாத அளவிற்கு நடந்து கொண்டு தான் உள்ளது. எத்தனையோ வீடுகளில் கணவன்மார்கள் குடித்து விட்டு பெண்களை வீட்டிலும், தெருவிலும் அடிப்பது. பிள்ளைகள் அழுதாலும் அதை சிறுது பொருட்படுத்தாது மனைவிகளை அசிங்கமாக பேசுவதும். 


போதை தலைக்கு ஏறியவுடன் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கத்தியை தூக்கி வீசுவதும், வெட்டுவதும், குத்துவதுமாக இருப்பது, இதனை அருகில் இருப்பவர்கள் தடுத்தால் அவர்களையும் கத்தியை காண்பித்து மிரட்டுவதும் தமிழகத்தில் அதிக இடங்களில் தினம் தினம் இச்சம்பவங்கள் நடந்து வருகிறது. இவையெல்லாவற்றையும் செய்து விட்டு அடுத்த நாள் எதுவும் நடகாதது போல கணவர்மார்கள் நடந்து கொள்வதை அதிக இடங்களில் பார்க்கவும் முடிகிறது. 




ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் உடனே அழுவதும், தான் ஒன்றுமே செய்யாவில்லை என்று அப்பாவிகளாக நடிப்பதும், நடக்கத்தான் செய்கின்றன. இவற்றிற்கு எல்லாம் முற்று புள்ளி வைக்கும் விதத்தில் தான் புதிய பாரதிய நியாய சம்ஹிதா (BNS) பிரிவு 85 கொண்டு வரப்பட்டுள்ளது.


அதன்படி, ஒரு பெண்ணின் கணவனோ அல்லது அவனது உறவினர்களோ அந்தப் பெண்ணுக்கு உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ கொடுமை செய்தால், அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வழிவகை செய்கிறது. 


இது இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 498A-க்கு பதிலாக கொண்டுவரப்பட்டது, குடித்துவிட்டு கொடுமை செய்தாலும் இனி தப்பிக்க முடியாது என வலுவான பாதுகாப்பு அளிக்கிறது. கணவன் அல்லது அவனது உறவினர்களால் மனைவிக்கு ஏற்படும் கொடுமை (Cruelty).இதற்கு தண்டனையாக அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவது மற்றும் அவர்களைப் பாதுகாப்பது பொருட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. 


இது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 498A-க்கு மாற்றாக இந்த BNS பிரிவு 85 உள்ளது. அதுமட்டுமில்லங்க குடிபோதையில் கொடுமை செய்து விட்டு, குடித்திருந்தேன் என்று கூறித் தப்பிக்கவும் முடியாது.  புதிய சட்டத் தொகுப்பில், இந்த பிரிவு பாரதிய நியாய சம்ஹிதா (BNS) 2023-இன் ஒரு பகுதியாகும், இது IPC, CrPC மற்றும் IEA ஆகிய சட்டங்களுக்குப் பதிலாக கொண்டுவரப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்