செங்கோட்டையன் செல்லாக்காசு.. யாருமே ஏற்றுக் கொள்ளாததால் தவெகவுக்கு சென்றுள்ளார்: செல்லூர் ராஜூ

Feb 02, 2026,05:53 PM IST
மதுரை: செங்கோட்டையன் ஒரு செல்லாக் காசு, வேறு யாரும் ஏற்றுக்கொள்ளததால் தவெகவில் சேர்ந்துள்ளார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

இது குறித்து மதுரையில்  செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போது செங்கோட்டையன் எங்களுடன் தானே இருந்தார். தூத்துக்குடி சம்பவத்தின் போது செங்கோட்டையன் மாங்கா பறிக்கச் சென்றாரா?, செங்கோட்டையன் ஒரு செல்லாக் காசு. வேறு யாரும் ஏற்றுக்கொள்ளததால் தவெகவில் சேர்ந்துள்ளார். அவருடைய பேச்சை நீங்கள் தான் பெரிதா எடுத்துக் கொள்கிறீர்கள்.





இன்னும் ஒரு சில மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு முல்லைப் பெரியார் கூட்டுக் குடிநீறக திட்டம் முழுமையாக மக்களுக்கு வந்து சேரும். முதல்வர் திறந்து வைத்த பிறகும் திட்டம். திட்டம் பயனில்லாமல் உள்ளது. பாஜக, அதிமுக ஆதரவு பெருகிக்கொண்டே இருப்பதை அவரால் சகிக்க முடியவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக உள்ளது. திமுக அரசைவிட பன்மடங்கு சிறந்த நிர்வாகி எடப்பாடி பழனிசாமி. கருத்துக்கணிப்பை பார்க்கும்போது முதல்வருக்கு பயம் வந்துவிட்டது.

பட்ஜெட்  சிலருக்கு கசக்கும், சிலருக்கு புளிக்கும், சிலருக்கு இனிக்கும். ஒன்பதாவது முறையாக பெண் பட்ஜெட்டை சமர்ப்பிப்பது தமிழ்நாட்டிற்கு பெருமை. கைத்தறி ஆடையை உடுத்தி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். எங்கள் ஆட்சிக் காலத்தில் 17 மருத்துவ கல்லூரி கொண்டு வந்தோம். எய்ம்ஸ் முதல் கட்டடம் திறக்கப்பட உள்ளது. மெட்ரோ ரயில் குறித்து மக்கள் மத்தியில் புரிதல் இல்லை. மத்திய அரசு கொடுக்க மறுக்கவில்லை ஆனால் தமிழக அரசு முறையான ஒரு வழிகாட்டு முறையை பின்பற்றவில்லை என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு

news

உங்க சிந்தனையை மாத்தி ஒரு தடவை ஆட்சியை என்கிட்ட கொடுத்துதான் பாருங்களேன்: சீமான் ஆவேசம்!

news

காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் அறிவிப்பு

news

Thank you People of India... ஏவுகணையில் எழுதி.. இஸ்ரேலைத் தாக்கி.. ஈரான் அதிரடி!

news

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

புதுச்சேரியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு வாளி சின்னம் ஒதுக்கீடு

news

புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டி...முடிவை அறிவித்த கிருஷ்ணசாமி

news

தங்கம் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ முழு விபரம்!

news

Petrol - Diesel: கூடுதல் கலால் வரியை அதிரடியாக குறைத்தது மத்திய அரசு!

அதிகம் பார்க்கும் செய்திகள்