சென்னை: ஜனநாயகன் படத்தில் 20 நிமிடம் வெட்டப்பட்டுள்ளதாக வதந்தி கிளப்புகிறார்கள். இது ஆச்சரியத்தையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. ஏன் இப்படி பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள் என்று பிரபல தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகன் படம் தொடர்பான சர்ச்சைகளுக்குப் பஞ்சமே இல்லை. தினசரி ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டேதான் இருக்கிறார்கள். அதுவும் ஏதாவது ஒரு தகவல் பரப்பபப்ட்டுக் கொண்டேதான் இருக்கிறது. இதில் பாதிக்கும் மேல் பொய்யானதாக இருப்பதுதான் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 20 நிமிடங்களுக்கு காட்சிகள் வெட்டப்பட்டு சென்சார் வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஜனநாயகன் திரைப்படத்தின் 20 நிமிட காட்சிகள் எடிட் செய்யப்பட்டு தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன - எப்படித்தான் இதுபோன்ற கதைகளை உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்களோ? தயாரிப்பாளர் இன்னும் தணிக்கை குறித்த தனது திட்டங்களையே இறுதி செய்யவில்லை, அப்படியிருக்கையில் ஏன் அனைவரும் இதுபோன்ற பொய் செய்திகளைப் பரப்புகிறார்கள்? இதன் பின்னணியில் என்ன நோக்கம் இருக்கிறது? படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கெடுப்பதற்காகவா? தயவுசெய்து இதை நிறுத்துங்கள்.
செய்திகளைப் பகிர்வதற்கு முன் தயாரிப்பாளரிடமிருந்து வரும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகக் காத்திருப்போம். தணிக்கை செயல்முறை இன்னும் நீதிமன்றம் மூலம் உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது. அதன் பிறகுதான், பிப்ரவரி மாத ரிலீஸ் திட்டங்கள் குறித்து நமக்குத் தெரியவரும்.
இருப்பினும், ஜனநாயகன் படத்தின் வெளியீட்டுத் தேதியை வைத்தே பல புதிய திரைப்படங்கள் தங்களது பிப்ரவரி மாத ரிலீஸ் தேதியை முடிவு செய்யக் காத்திருக்கின்றன. மற்ற திரைப்படங்கள் பிப்ரவரியில் வெளியாவதா அல்லது மார்ச் 2026-க்கு ஒத்திவைப்பதா என்பதைத் தீர்மானிக்க, முறையான அறிவிப்பு விரைவில் வரும் என நம்புவோம் என்று அவர் கூறியுள்ளார்.
ஜனநாயகன் படம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு சமீபத்தில் பிறப்பித்த உத்தரவின்படி, தனி நீதிபதி மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதுவரை அந்த வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்று தெரியவில்லை. காரணம், தயாரிப்பாளர் தரப்பில் தனி நீதிபதியிடம் இன்னும் மனு தாக்கல் செய்யவே இல்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் சென்சாரிடம் மீண்டும் போகப் போகிறார்களா அல்லது உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப் போகிறார்களா அல்லது தனி நீதிபதியிடமே செல்லப் போகிறார்களா என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை இல்லை என்பதால் ஜனநாயகன் விவகாரம் அப்படியேதான் நீடிக்கிறது.
திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.. 60 ஆண்டு கால கூட்டணி முறிந்தது!
ஜூலை 1 முதல்.. புத்தெழுச்சி பெறப்போகும்.. 125 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
வகுப்பறையில் ரீல்ஸ் பண்ணாதீங்கப்பா.. தவெகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ்!
சென்னை மாநகராட்சிப் பள்ளியில் .. சர்வதேச யோகா தினம்.. மாணவர்கள் அசத்தல்
மிஸ்.. நாடகம்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
பூரிக்கும் புன்னகைக்கு பூக்களும் சிரிக்குமே
சிந்தனைச் சிதறல்.. வளமைக்கு ஒரு காலம் என்றால்.. மகிழ்ச்சிக்கு ஒரு காலம்!
Fathers Day 2026.. அப்பா என்பவர்.. நம் உயிர் மட்டுமல்ல!
When people come together as one... வெற்றி நமதே!
{{comments.comment}}