14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!

Nov 23, 2024,05:38 PM IST

டெல்லி:  நாடு முழுவதும் 14 மாநிலங்களில் 48 சட்டசபைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் பாஜகவுக்கு அதிக அளவிலான இடங்கள் கிடைத்துள்ளன. 2வது இடத்தை காங்கிரஸும், 3வது இடத்தை திரினமூல் காங்கிரஸும் பெற்றுள்ளன.


மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலோடு, 14 மாநிலங்களைச் சேர்ந்த 48 சட்டசபைத் தொகுதிகளுக்கும், 2 லோக்சபா தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது.


மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது.


48 சட்டசபைத் தொகுதிகளில் அதிகபட்சமா பாஜகவுக்கு 18 இடங்களில் வெற்றி  கிடைத்துள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 8 தொகுதிகள் கிடைத்துள்ளன. மேற்கு வங்காளத்தில் திரினமூல் காங்கிரஸ் தான் போட்டியிட்ட 6 சட்டசபைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அதிர வைத்துள்ளது.


14 மாநில சட்டசபை இடைத் தேர்தலில் யார் யாருக்கு எத்தனை சீட் என்ற விவரம் வருமாறு:




அஸ்ஸாம் (5) - பாஜக 2, ஐக்கிய மக்கள் விடுதலை கட்சி 1, அஸ்ஸாம் கன பரிஷத் 1, காங்கிரஸ் 1


பீகார் (4) - பாஜக 2, ஐக்கிய ஜனதாதளம் 1, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 1


சட்டிஸ்கர் (1)- பாஜக


குஜராத் (1) - பாஜக


கர்நாடகா (3) - காங்கிரஸ்


கேரளா (2) - காங்கிரஸ் 1, சிபிஎம் 1.


மத்தியப் பிரதேசம் (2) - காங்கிரஸ் 1, பாஜக 1


மேகாலயா (1) - தேசிய மக்கள் கட்சி


பஞ்சாப் (4) - ஆம் ஆத்மி 3, காங்கிரஸ் 1


ராஜஸ்தான் (7) - பாஜக 5, காங்கிரஸ் 1, பாரத் ஆதிவாசி கட்சி 1.


சிக்கிம் (2)- சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா


உத்தரப் பிரதேசம் (9) - பாஜக 6, ராஷ்டிரிய லோக்தளம் 1, சமாஜ்வாடி கட்சி 2.


உத்தரகண்ட் (1) - பாஜக


மேற்கு வங்காளம் (6) - திரினமூல் காங்கிரஸ்


லோக்சபா இடைத் தேர்தல்:




கேரள மாநிலம் வயநாடு மற்றும் மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக தலா ஒரு தொகுதியில் வென்றுள்ளன.


வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி வென்றுள்ளார். நான்டெட் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சாந்துக்ராவ் மரடோரா ஹம்பர்டே வெற்றி பெற்றுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

அதிகம் பார்க்கும் செய்திகள்