டெல்லி: முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்க எந்த பிரச்சனையும் இல்லை. ஏற்கனவே 2 தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. எனவே இது குறித்து ஆய்வு செய்யத் தேவையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை நடத்த கேரள அரசு தடையாக இருப்பதாகவும், அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை செய்ய விடாமலும், அணையை பலப்படுத்த விடாமலும் கேரள அரசு தடையாக இருக்கிறது என்று வாதிட்டனர்.

அதற்கு நீதிபதிகள் இந்தப் பிரச்சனைக்கு இரு மாநில அரசுகளும் சுமூக தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேலும், தொடர்ந்து இரு தரப்பு குற்றம் சாட்டி வந்தால் எந்த தீர்வும் வராது. அணையை மேற்பார்வை செய்வதற்காக உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி கண்காணிப்புக் குழு தொடர வேண்டுமா? அல்லது அணைகள் பாதுகாப்பு சட்டப்படி தற்போது அமைக்கப்பட்டுள்ள குழு தொடர வேண்டுமா என்பது குறித்து இரு மாநில அரசுகளும் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள்.
அதன்பின்னர், முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்க எந்த பிரச்சனையும் இல்லை. ஏற்கனவே 2 தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. எனவே அது குறித்து ஆய்வு செய்யத் தேவை இல்லை என்று கருத்து தெரிவித்துடன், இந்த வழக்கு குறித்த விரிவான விசாரணையை பிப்ரவரி 3ம் வாரத்திற்கும் ஒத்தி வைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கரூர் வழக்கு.. 2வது சிபிஐ விசாரணை முடிவுக்கு வந்தது.. புன்னகையுடன் வெளியேறிச் சென்ற விஜய்!
2026ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம்.. நாளை கூடுகிறது.. ஆளுநர் உரையாற்றுவாரா?
அடுத்த திட்டம் என்ன?...ஆதரவாளர்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு
மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?
71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,360 உயர்வு
அமைதி .. சத்தம் இல்லாமல் வந்தபோது...!
சிவபெருமானின் முழு அருளை பெற இந்நன்நாளை தவற விடாதீர்கள்
{{comments.comment}}