வாக்கு சதவீதத்தை காட்டி அழுத்தம் தர மாட்டோம்: நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்

Mar 06, 2026,05:58 PM IST

நெல்லை: "தேர்தலில் போட்டியிடுவதற்கான தொகுதிகளை ஒதுக்கும் போது, கடந்த கால வாக்கு சதவீதத்தை ஒரு அளவுகோலாக வைத்து நாங்கள் அழுத்தம் கொடுக்கவில்லை" என்று பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தொகுதி பங்கீடு குறித்த விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. எந்த கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள், எந்த தொகுதியில் எந்த கட்சி போட்டியிட போகிறது, வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்புகள் அனைவரிடமும் அதிகரிக்க துவங்கி விட்டது. இந்நிலையில், நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜகவின் நிலைப்பாடு குறித்து வெளிப்படையாகப் பேசினார்.




பொதுவாக அரசியல் கட்சிகள் தங்களின் கடந்த கால வாக்கு சதவீதத்தை முன்வைத்து அதிக தொகுதிகளை கேட்டு பெறுவது வழக்கம். ஆனால், இந்த முறை பாஜக அத்தகைய பிடிவாதத்தைக் காட்டவில்லை என்பதை நயினார் நாகேந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த கால வாக்கு சதவீதத்தை காட்டி கூட்டணி தலைமைக்கு நாங்கள் அழுத்தம் தரவில்லை. இனியும் தர மாட்டோம். தொகுதி பங்கீட்டின் போது வெறும் எண்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், அந்தந்த தொகுதிகளில் உள்ள வெற்றி வாய்ப்புகள் மற்றும் கள நிலவரத்தை வைத்தே பேச்சுவார்த்தைகள் நகர்வதாக அவர் குறிப்பிட்டார்.


தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே இணக்கமான சூழல் நிலவுவதாகவும், தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த தேர்தல்களில் பாஜக பெற்ற வாக்கு சதவீதத்தை விட, தற்போது கட்சியின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக அக்கட்சியினர் நம்புகின்றனர். எனவே, பழைய புள்ளிவிவரங்களுக்குள் முடங்கி விடாமல், தற்போதைய கள எதார்த்தத்திற்கு ஏற்ப இடங்களைப் பெறுவதே கட்சியின் வியூகமாக பாஜக கருதுகிறது.


அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளுடனான கூட்டணி குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், மேலிட முடிவுகளின்படி கூட்டணி அமையும் என்றும், தொண்டர்கள் உற்சாகத்துடன் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டதாகவும் கூறினார்.


2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது செய்த தவறுகளை மீண்டும் செய்து விடக் கூடாது என்பதிலும், இந்த முறை வெற்றி ஒன்றே இலக்கும் என்பதிலும் பாஜக தெளிவாக உள்ளது. அதனால் அதிமுக தலைமை கொடுக்கும் தொகுதிகளை பெற்றுக் கொண்டு, அந்த தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்பது தான் பாஜக தலைமை தமிழக தலைவர்களிடம் வலியுறுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. 40 தொகுதிகளை பெற்று அதில் 10 தொகுதிகளில் வெற்றி பெறுவதை விட, 20 தொகுதிகளில் போட்டியிட்டாலும் அவற்றில் 18 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் இந்த முறை பாஜக.,வின் அஜெண்டாவாக உள்ளதாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

We The Leaders: புதிய அரசியல் இயக்கம்.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி.. அண்ணாமலை அறிவிப்பு!

news

தமிழகத்தில் தீவிரம் அடையும் தென்மேற்கு பருவமழை: 4 மாவட்டங்களுக்கு நாளை ‘ஆரஞ்சு அலர்ட்’

news

Annamalai Politics: அண்ணாமலையின் அரசியல் எப்படி இருக்கும்?

news

பாஜகவிலிருந்து விலகினார்.. அண்ணாமலையின் புதிய சகாப்தம் இன்று தொடங்குகிறது!

news

இலங்கையில் பரிதாபம்.. முதியோர் இல்லத்தில் கோர தீ விபத்து.. 12 பேர் உயிரிழப்பு

news

மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்போம்!

news

சிந்தனைச் சிதறல்.. உறவினும் மேலான ஒரு இதயம் தேவை!

news

உலக சுற்றுச்சூழல் தினம்.. கொண்டாடுவோம் இயற்கையை.. பாதுகாப்போம் பூமியை!

news

ஆசையே அலை போலே!

அதிகம் பார்க்கும் செய்திகள்