சென்னை: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் இடையே அசாதாரண சூழ்நிலை உருவாக வாய்ப்பிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும் நாளையும் மதுரை முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் இந்த மலையின் ஒரு பக்கம் சிக்கந்தர் தர்காவும் உள்ளது. இங்கு இஸ்லாமியர்கள் பலரும் சென்று வருகின்றனர். இந்த தர்காவில் ஆடு கோழி பலியிட்டதாகவும், ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி அசைவ உணவு உண்டதாகவும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து பலரும் சோசியல் மீடியாவில் திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த விவகாரத்தில் இந்து முன்னணி குதித்துள்ளது. இந்து முன்னணி அமைப்பினர் இன்று திருப்பரங்குன்றம் கோயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால் இந்த போராட்டத்திற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்திருந்தது.
இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் பரவியது. இதனையடுத்து இந்து இஸ்லாமியர்களிடையே மதப் பிரச்சினை ஏற்பட்டு அசாதாரண சூழல் உருவாக வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரையில் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு போட்டு மாவட்ட ஆட்சியாளர் சங்கீதா அறிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பிப்ரவரி 4ஆம் தேதியன்று இந்து அமைப்பினர் மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், அதற்கு தென் மாவட்டங்களில் இருந்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள உள்ளதால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
இதனிடையே இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களை சார்ந்தோர் திருப்பரங்குன்றம் மலை குறித்து தங்கள் கோரிக்கையை பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதனால் இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் இடையே அசாதாரண சூழல் உருவாக வாய்ப்புள்ளது.
அதனால், மதுரை மாவட்டம் மற்றும் மாநகர் முழுவதும் வெளி நபர்கள் பிரவேசிக்காத வகையில் 3-2-2025 காலை 6 மணி முதல் 4-2-2025 இரவு 12 மணி வரை 2 நாட்கள் மட்டும் மதுரை மாநகர் மற்றும் மதுரை மாவட்டத்தில் பொது அமைதியை பாதுகாக்கும் பொருட்டு, மனித வாழ்வு, பொதுப் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியைக் கருத்தில் கொண்டும் போராட்டங்கள், கூட்டங்கள் மற்றும் தர்ணாக்கள் போன்றவற்றிற்கு 144 தடை உத்தரவு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?
கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கும், நாளை 4 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதமா? ஆளுநர் மாளிகை விளக்கம்
கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!
பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி
யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!
ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்
{{comments.comment}}