விஜயவாடா: ஆந்திரமாநிலத்தில் கடலில் சிக்கிய 1500 கிலோ எடை கொண்ட தேக்கு மீனை சென்னை வியாபாரி ரூ.4 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். இந்த மீனை கிரேனை வைத்துத்தான் வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றனராம்.
ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டின மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்க சென்றனர். மீனவர்களின் வலையில் அரிய வகை தேக்கு மீன் சிக்கியுள்ளது. இந்த மீன் மிகப் பெரியது. ராட்சத மீன். ஒரு மீனின் எடை 1500 கிலோ வாகும். இந்த மீனை கரைக்கு கொண்டு வர முடியாததால், கிரேனின் உதவியுடன் கடலில் இருந்து அந்த ராட்சச மீனை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்து அந்த மீன் ஏலத்தில் விடப்பட்டது. ஏலத்தின் போது இந்த ராட்சச மீனை பார்ப்பதற்கு கூட்டம் அதிகளவில் கூடியது. சென்னையை சேர்ந்த வியாபாரி ஓவர் அந்த மீனைப்பற்றி தெரிந்ததால், ரூ.4 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். அந்த மீனை லாரியில் ஏற்றி கொண்டு வந்துள்ளார்.
பொதுவாக தேக்கு மீன் மருந்துகள் தயாரிக்க பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக, ஆயுர்வேத மருத்துகள் தேக்கு மீனில் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. மருத்துவ குணம் காரணமாக இந்த மீனின் விலை எப்போதுமே அதிகமாக இருக்கும்.
இதே பகுதியில்தான் கடந்த 2020ம் ஆண்டு ராட்சத ஸ்டிங்கிரே மீன் சிக்கியது. அது 3 டன் எடை இருந்தது என்பது நினைவிருக்கலாம்.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!
"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!
{{comments.comment}}