குடியுரிமையை உதறிய 16 லட்சம் இந்தியர்கள்.. 2022ல் மட்டும் 2.25 லட்சம் பேர்!

Feb 10, 2023,01:29 PM IST
டெல்லி: 2011ம் ஆண்டு முதல் இதுவரை 16 லட்சம் இந்தியர்கள் குடியுரிமையை உதறியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.



இதில் அதிகபட்ச அளவாக 2022ம் ஆண்டு 2.25 லட்சம் பேர் இந்தியக் குடியுரிமையை உதறியுள்ளனர். குறைந்தபட்சமாக 2020ம் ஆண்டு 85,256 பேர் குடியுரிமையை வேண்டாம் என்று விட்டுக் கொடுத்துள்ளனர். இந்தத் தகவலை நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில் இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மேலும் கூறியுள்ளதாவது:

2015ம்ஆம்டு 1 லட்சத்து 31 ஆயிரத்து 489 பேர் குடியுரிமையை வேண்டாம் என்று விட்டுக் கொடுத்தனர். 2016ம் ஆண்டு இது 1 லட்சத்து 41 ஆயிரத்து 603 பேராக இருந்தது.  2017ல் குடியுரிமை வேண்டாம் என்று சொன்னவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 49 பேர் ஆவர்.

2018ம் ஆண்டு 1, 34, 561 பேரும், 2019ம் ஆண்டு 1, 44, 017 பேரும், 2021ம் ஆண்டு 1 63, 370 பேரும் குடியுரிமையை விட்டுக் கொடுத்தனர். 2022ம் ஆண்டு குடியுரிமை வேண்டாம் என்று சொன்னவர்கள் 2, 25,620 பேர் ஆவர். கடந்த 2011ம் ஆண்டிலிருந்து இதுதான் அதிகபட்ச அளவாகும்.

2011ல் குடியுரிமையை விட்டவர்கள் 1, 22, 819 பேர் ஆவர். இது 2012ல் 1, 20, 923 பேராக இருந்தது. 2013ல் 1,31,405 என்ற அளவில் இருந்தது.  2014ம் ஆண்டு 1,29, 328 பேர் குடியுரிமையை கைவிட்டனர். 2011ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 16 லட்சத்து  63 ஆயிரத்து 440 பேர் இந்தியக் குடியுரிமையை உதறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்