சென்னை: சென்னையில் போலீஸ் கமிஷனர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது 2 கூடுதல் ஆணையர்களும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்து வந்த சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதில் ஏ. அருண் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ரவுடிகள் ஒடுக்கப்படுவார்கள், அவர்களது பாஷையில் அவர்களுடன் பேசப்படும் என்று புதிய ஆணையர் அருண் அதிரடியாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது மேலும் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் மாற்றப்பட்டுள்ளனர். இதில் முக்கியமாக சென்னையின் 2 கூடுதல் ஆணையர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் சென்னையின் 3 உயர் காவல்துறை அதிகாரிகளும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று நடந்துள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்ற விவரம்:

தாம்பரம் காவல்துறை ஆணையர் ஏ அமல்ராஜ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் காவல்துறை ஆணையராக கூடுதல் டிஜிபி அபின் தினேஷ் மோடக் நியமிக்கப்பட்டுள்ளார்.
கூடுதல் டிஜிபி ஹெச் எம் ஜெயராம் மாநில குற்றப்பதிவேட்டு பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் குமார் அகர்வால் ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ராமன் நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாக பிரிவு கூடுதல் டிஜிபி வினித் தேவ் வாங்கடே சென்னை தலைமையிடத்து ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிபிசிஐடி ஐ ஜி டி எஸ் அன்பு விடம் சிபிசிஐடி கூடுதல் டிஜிபி பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. சைபர் க்ரைம் பிரிவு ஏடிஜிபி சஞ்சய் குமார் கடலோரப் பாதுகாப்பு பிரிவின் கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடலோர பாதுகாப்பு பிரிவு கூடுதல் டிஜிபி சந்திப் மிடல் சென்னை சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டிஜிபி ராஜீவ்குமார் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பிரிவின் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஏடிஜிபி தமிழ் சந்திரன் தொழில்நுட்ப பிரிவுக்கான ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்
சென்னை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா தென்மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். தென் மண்டல ஐஜி என் கண்ணன் சென்னை தெற்கு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை வடக்கு கூடுதல் ஆணையராக இருந்த அஸ்ரா கார்க் வடக்கு மண்டல ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐஜி நரேந்திரன் நாயர், சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
சேலம்- திருப்பூர் கமிஷனர்களும் மாற்றம்
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபூ சேலம் மாநகர காவல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாநகர காவல் துறை ஆணையர் விஜயலட்சுமி ஆயுதப்படை ஐஜியாக சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை ஆயுதப்படை ஐஜி லட்சுமி, திருப்பூர் மாநகர ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அருட்பெரும் ஜோதி.. தனிப்பெரும் கருணை.. ராமலிங்க அடிகளார் வள்ளலாராக மாறிய கதை!
இடைக்கால பட்ஜெட்: தமிழக அமைச்சரவை பிப்., 5ல் கூடுகிறது
பல ஆண்டுகளாக காங்கிரஸ் உடன் கூட்டணியில் உள்ளோம்..அக்கட்சியுடன் மோதல் போக்கு இல்லை:எம்பி கனிமொழி
அதிமுக - பாஜக வாக்கு வங்கியை பதம் பார்க்கிறாரா விஜய்.. சிவோட்டர் சர்வே சொல்வது என்ன?
தாறுமாறாக ஏறி வரும் தங்கம் விலை.. எப்படிச் சமாளிப்பது.. நகைக்கான மாற்று வழிதான் என்ன?
தீண்டாமையை ஒழிப்போம்.. சம தர்ம சமத்துவத்திற்கான உறுதிமொழி ஏற்போம்!
விநாயகர் தலையில் அகத்தியர் வைத்த மூன்று கொட்டு.. நட்டாற்றீஸ்வரர் திருக்கோவில் மகிமை!
இந்தியாவின் வீரத் திருமகன்கள்.. காந்தியார் மறைந்த தினம்.. தேசிய தியாகிகள் தினம்!
தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.4,800 குறைவு
{{comments.comment}}