ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையிலான போர்.. திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை

Mar 17, 2026,05:07 PM IST

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி போராட்டம் நடத்தியுள்ள நிலையில், அதற்கு தி.மு.க செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கடும் பதிலடி கொடுத்துள்ளார்.


தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று தமிழ்நாட்டில் போராட்டம் நடந்தது. இந்த நிலையில் இதுகுறித்தும், திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்தும் திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கருத்து தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் கூறியதாவது:




எங்கள் தேர்தல் அறிக்கை குழு மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறது. தமிழகத்தை அடுத்த 50 ஆண்டுகால வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் வகையிலான பல புதுமையான திட்டங்களை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். 


இந்தப் போர் தமிழகத்திற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையிலானது. இன்னும் வெளிப்படையாகச் சொல்லப்போனால், இது ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையிலான சித்தாந்தப் போர்.


தி.மு.க அரசு பதவியேற்ற முதல் நாளிலிருந்தே சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். ஆனால், குற்றப் பதிவுகளை பார்த்தால், தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரியும். உண்மையில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.


அ.தி.மு.க ஆட்சியில் மிக மோசமான குற்றங்கள் 1,500 முதல் 1,800 வரை பதிவாகின. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. தமிழகம் பாதுகாப்பான மாநிலமாகவும், சென்னை மிகவும் பாதுகாப்பான நகரமாகவும் திகழ்கிறது.


தமிழகக் காவல்துறை மிகச் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறது. எதிர்க்கட்சிகள் சொல்லும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றார் அவர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போதும் காற்றே உன் பேச்சை நிறுத்து!!

news

என்னுள் உறைந்தவன்!

news

Short Story: மயிலாப்பூர் மாமியும் மசால் வடையும்!

news

சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தனித் தீர்மானம்.. விவாதத்திற்குப் பின் நிறைவேறியது

news

பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படாதது பெரும் ஏமாற்றம்: பாமக சௌமியா அன்புமணி பேச்சு!

news

கடன் வரம்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

news

தமிழகத்தில் ஆகஸ்ட் 17 வரை மழைக்கு வாய்ப்பு...சென்னையிலும் மழை தொடரும்

news

நாளை ஆடி அமாவாசை நாளில் வரும் சூரிய கிரகணம் 2026 ஆகஸ்ட்...இதன் முக்கியத்துவம்

news

LPG கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் கவனத்திற்கு: e-KYC சரிபார்ப்பு ஆகஸ்ட் 15 வரை அவகாசம்

அதிகம் பார்க்கும் செய்திகள்