அரக்கோணம்: வீட்டில் தனியாக இருந்த போது தொடர்ந்து வீடியோ கேம் விளையாடி வந்த 18 வயது மாணவருக்கு திடீரென்று மனநலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் இந்த சம்பவம் அமைந்துள்ளது.
அரக்கோணம் அடுத்துள்ள காலிவாரி பகுதியை சேர்நதவர் தீபன். இவரது தந்தை சமீபத்தில் தான் இறந்துள்ளார். 18 வயதாகும் தீபன், எப்போது பார்த்தாலும் வீடியோ கேம் ஆடி வருவாராம். வீட்டில் தனியாக வீடியோ கேம் விளையாடியுள்ளார். இரவு பகல் பாராமல் தொடந்து வீடியோ கேம் விளையாடியதால் திடீர் என்று மனநலம் பாதிக்கப்பட்டு விட்டது.
விடாமல் தொடர்ந்து வீடியோ கேம் ஆடியதால் நரம்புகள் பாதிக்கப்பட்டு அவரது மன நலமும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மகனின் உடலில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தைக் கண்டு பயந்து போன அவரது தாயார் உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சென்னைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அவரது கை கால்களைக் கட்டி ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசினர் மன நல மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளனர். அங்கு தீபனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீடியோ கேம் ஆடி இப்படி மன நலம் பாதிக்கப்பட்ட மாணவரின் நிலை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அப்படி இருக்கையில் வீடியோ கேம் போன்ற அபாயங்களை குறைந்த அளவில் பயன்படுத்தினாலே ஆபத்து வரும் என்ற நிலையில், இப்படி இடைவிடாமல் விளையாடும் அளவுக்கு அந்தப் பையனுக்கு ஏன் பெற்றோர்கள் தனிமையைக் கொடுத்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் தற்பொழுது அதிகரிக்கத் தொடங்கி உள்ளது என்பது வேதனை அளிப்பதாகவே உள்ளது. குழந்தைகள், சிறுவர்களிடையேதான் இப்பாதிப்பு தற்பொழுது அதிகமாக உள்ளது. இச்சம்பவங்களினால் இளம் வயதுடையவர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகி வருகிறது. செல்பான்களை தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் ஒழிய இவற்றில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}