சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக கன மழை பெய்து வந்தது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக கனமழை மற்றும் மிக கனமழை காரணமாக ஆரஞ்சு, மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது தென்னிந்திய பகுதியின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், கேரள கடலோர பகுதியை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 16 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை, சென்னையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுதினம் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கணிதத்தின் தலைமகன்!
தேசிய கணித தினமாச்சே இன்னிக்கு.. உங்களுக்கு ஓர் புதிர்.. விடையைச் சொல்லுங்க பார்ப்போம்!
இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை
புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டின் அழகு!
தமிழக பொங்கல் பரிசு எப்போது ? வெளியான செம தகவல்
'எண்'ணற்ற சாதனைகள் படைத்த.. கணித மேதை சீனிவாசன் ராமானுஜன்!
டிசம்பர் 26 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்
The world of AI.. மனித சிந்தனையின் நவீன வடிவம்.. செயற்கை நுண்ணறிவு
{{comments.comment}}