Mini moon: என் வானிலே.. ஒரே.. இல்லை இல்லை.. 2 வெண்ணிலா.. இனி பார்க்கலாம்.. எப்படி?

Sep 30, 2024,03:52 PM IST

டில்லி :   மிகவும் அற்புதமான ஆச்சரியப்படுத்தும் நிகழ்வாக செப்டம்பர் 29ம் தேதி முதல் நவம்பர் 25ம் தேதி வரை நிலவில் இரண்டு நிலாக்களை பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். ஆனால் இவற்றை வெறும் கண்களால் பார்க்க முடியாது. அதிநவீன தொலைநோக்கி வழியாக தான் பார்க்க முடியும் என சொல்லப்பட்டுள்ளது.


பூமிக்கு  இருப்பது ஒரே ஒரு நிலாதான்.. பாட்டி வடை சுடுவதாக நம்மிடம் கூறி வைத்துள்ள அந்த நிலாவைத்தான் நாம் இதுநாள் வரை ரசித்துக் கொண்டிருக்கிறோம்.. அதை வைத்து ஏகப்பட்ட கவிதை பாடியுள்ளோம்.. கனவும் கண்டு வருகிறோம். ஆனால் தற்போது பூமிக்கு 2வதாக ஒரு நிலவு கிடைத்துள்ளது.




பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு, 2024 PT5 Asteroid என்னும் ஒரு சிறு கோள், பூமியைச் சுற்றும் ஒரு தற்காலிக மினி நிலாவாக பிரகாசிக்க உள்ளது. இந்த மினி நிலா பூமியின் சுற்று வட்டப்பாதையில் இரண்டு மாதங்கள் வரை சுற்றி வர உள்ளது. ஆனால் இந்த மினி நிலா மிகவும் சிறியதாகவும், மங்கலாகவும் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த மினி நிலா பூமியின் அருகே சுமார் 14 லட்சம் மீட்டர் தூரத்தில் வர உள்ளதாகவும், இதன் அளவு 5 முதல் 20 மீட்டர் வரை இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.


இந்த மினி நிலாவானது, நம்ம ஒரிஜினல் நிலவை விட 1,73,700 மடங்கு சிறியது. இயற்கையில் ஒரு நிலவு, ஒரு சூரியன் தானே இருப்பதாக இதுவரை சொல்லப்பட்டு வந்தது. இப்போது எப்படி மினி நிலா வந்தது என பலரும் ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கும் வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெளிவான விளக்கம் அளித்துள்ளனர்.


தற்போது நாம் காணும் மினி நிலாவானது ஒரு விண்கல் ஆகும். உண்மையில் பாறைகள், மண்ணால் ஆன இந்த விண்கல்லிற்கு நிலாவை போன்று தனி ஒளி கிடையாது. பொதுவாக சூரியனின் ஒளி, நிலவின் மேற்பரப்பில் பட்டு, அந்த ஒளி பூமிக்கு திரும்பும் போது, நிலா ஒளிர்வது போல நமக்கு தெரிகிறது. அதே போல் தான் விண்கல் மீதும் சூரிய ஒளி படுவதால் அது நிலா போல ஒளிர்வது போன்று தெரிவதாக சொல்லப்படுகிறது. 


காரணம் எதுவாக இருந்தாலும், ஒரே நேரத்தில் இரண்டு நிலாவை வானத்தில் பார்த்து ரசிக்கும் வித்தியாசமான அனுபவம் நமக்கு கிடைத்துள்ளது. அதுவும் இரண்டு மாதங்கள் இந்த நிகழழ்வை காணலாம் என்பதால் இது பற்றிய இன்னும் பல ஆச்சரியத்தகவல்கள் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.


இனி இந்த இரட்டை நிலாவை வைத்து எத்தனை பேர் கவிதை பாடப் போறாங்கன்னு தெரியலை..!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்