சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.60,440 என புதிய உச்சத்தில் விற்கப்பட்டு வருகிறது.
கடந்த 21ம் தேதி தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது. இதனை கண்ட தங்க நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிர்த்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி இருந்தது. இன்றும் குறைந்திருக்கும் என்று எண்ணியிருந்த வாடிக்கையாளர்களுக்கு நகை விலை ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. இன்று மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது.
நகை விலை உயர்விற்கு என்ன காரணம் தெரியுமா?
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைய குறைய தங்கத்தின் விலை உயரும். ஏன்னென்றால், பெரும்பாலான தங்கம் இறக்குமதி தான் செய்யப்படுகிறது. அதே நேரத்தில் சீனா,ரஷ்யா, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இதனால், தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது. சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை உயர்ந்து தான் உள்ளது. இந்தியாவை பொருத்தவரை ஆடி மாதத்தில் நகை வாங்குபவர்களின் எண்ணிக்கைய குறைந்து தான் இருக்கும். தை மாதத்தில் நகை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும் இதன் காரணமாக மேலும் தங்கம் விலை உயரும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய (24.01.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,555க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,242க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 60,440 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.75,550 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,55,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,242 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.65,936 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.82,420 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,24,200க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,555கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,242க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,570க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,257க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,555க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,242க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,555க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,242க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,555க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,242க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,555க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,242க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,560க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,247க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.7,127
மலேசியா - ரூ.7,121
ஓமன் - ரூ. 7,399
சவுதி ஆரேபியா - ரூ.7,225
சிங்கப்பூர் - ரூ.6,949
அமெரிக்கா - ரூ. 6,732
துபாய் - ரூ.7,301
கனடா - ரூ.7,405
ஆஸ்திரேலியா - ரூ.6,804
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
.
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 105 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 840 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1050 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,500 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,05,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சிபிஐ வசம் திருப்புவனம் அஜீத்குமார் வழக்கு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கையோடு இதையும் செய்ய வேண்டும்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 02, 2025... இன்று பணவரவை பெற போகும் ராசிக்காரர்கள்
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்
Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு
வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!
{{comments.comment}}