மும்பை: 2028ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இன்று வெளியிட்டது.
சர்வதேச ஒலிம்பிக்கில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு காலத்தில் கிரிக்கெட்டும் இருந்தது. 1900ம் ஆண்டு பாரீஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியோடு கிரிக்கெட் போட்டி ஏறக்கட்டப்பட்டு விட்டது. இந்த நிலையில் மீண்டும் கிரிக்கெட் ஒலிம்பிக் போட்டியில் நுழைந்துள்ளது.
141வது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிரிக்கெட்டை சேர்க்க ஒப்புதல் அளித்துள்ளனர். ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டுடன் ஐந்து விளையாட்டுகளும் சேர்க்கப்பட்டுள்ளது.
2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லால் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இதில் கிரிக்கெட் இடம் பெற உள்ளது. இத்துடன் ஃபிளாக் கால்பந்து, பேஸ் பால் - சாப்ட் பால், ஸ்குவாஷ், லாக்ரோஸ் ஆகிய விளையாட்டுகளும் இடம்பெற்றுள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் இடம் பெற்றுள்ளது. சமீபத்தில் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் மற்றும் ஆடவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா சாம்பியன் ஆகி தங்கப் பதக்கம் வென்றது நினைவிருக்கலாம. இனி ஒலிம்பிக்கிலும் கிரிக்கெட் விளையாடப்படவுள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}