வாஷிங்டன் : 2024 ம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு, அமெரிக்க வாழ் இந்தியர்களான விவேக் ராமசாமி, நிக்கி ஹாலே, ஹர்ஷ் வர்தன் சிங் ஆகியோர் ச ம டஃப் கொடுத்து வருகின்றனர்.
2024 ம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சியின் விவாதங்கள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் 8 வேட்பாளர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். இவர்களில் இருவர் அமெரிக்க வாழ் இந்தியர்கள். தற்போது டிரம்ப்பிற்கு, அமெரிக்க வாழ் இந்தியர்களான விவேக் ராமசாமி, நிக்கி ஹாலே, ஹர்ஷ் வர்தன் சிங் ஆகிய மூவரும் கடும் போட்டியாக இருந்து வருகின்றனர்.
இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்புக்களில் டிரம்பிற்க அடுத்த இடத்தில் விவேக் ராமசாமி இருந்த வருகிறார். விவேக் ராமசாமியின் பாபுலாரிட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கருத்து கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. மற்ற குடியரசு கட்சி வேட்பாளர்களுடன் ஒப்பிடுகையில் நிக்கி ஹாலே மிக குறைவான புள்ளிகளையே பெற்றிருக்கிறார்.
ஹர்ஷ் வர்தன் சிங், சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விவாதங்களை முன்வைக்கவில்லை என்றாலும் டிரம்ப் மற்றும் விவேக் ராமசாமிக்கு எதிராக தொடர்ந்து தனது பிரசாரத்தை செய்து வருகிறார். இந்த மூன்று இந்திய வம்சாவளியினரும் தங்களை நிரூபிப்பதற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் டிரம்பிற்கு கடுமையான போட்டியை தந்து கொண்டிருக்கிறது.
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
{{comments.comment}}