"உங்களை வெறுக்கிறேன்"..  3 கருப்பர் இனத்தவரை சுட்டுக் கொள்ளை அமெரிக்க இளைஞர்!

Aug 27, 2023,10:35 AM IST
ஜாக்சன்வில்லி, புளோரிடா: கருப்பர் இனத்தவரை குறி வைத்து வெள்ளை அமெரிக்கர் நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் புளோரிடா மாகாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருப்பர் இனத்தவர் மீதான வெறுப்பைக் காட்டும் வகையில் தான் அவர்களை சுட்டதாக துப்பாக்கியால் சுட்ட நபர் கூறியுள்ளதாக ஜாக்சன்வில்லி நகர ஷெரீப் டி.கே.வாட்டர்ஸ் கூறியுள்ளார். 

சமீப காலமாக அமெரிக்காவில் பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு நடப்பதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. ஸ்டோர்கள், கால்பந்து போட்டிகள் என தொடர்ந்து வரும் துப்பாக்கிச் சூட்டில் தற்போது வெறுப்புணர்வுடன் ஒருவர் கருப்பர் இனத்தவரை குறி வைத்து தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ஜாக்சன்வில்லியில் உள்ள டாலர் ஜெனரல் ஸ்டோர்ஸ் என்ற ஷாப்பிங் மையத்தில்தான் தற்போது நடந்த துப்பாக்கிச் சூடு  சம்பவம் அரங்கேறியுள்ளது. சுடப்பட்ட 3 கருப்பர் இனத்தவரும் சம்பவ இடத்திலேயே இறந்து போய்விட்டனர். 

3 பேரை கொலை செய்த நபருக்கு 20 வயதுகளில் தான் இருக்கும்.  இந்த சம்பவத்திற்குப் பின்னர் அவர் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டு விட்டார். சாவதற்கு முன்பு தான் கருப்பர்களை வெறுப்பதாக அவர் கூறியுள்ளா்.

கொல்லப்பட்ட 3 பேரில் 2 பேர் ஆண்கள், ஒருவர் பெண் ஆவார்.  துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட நபர் கிளே கவுன்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இது தெற்கு ஜாக்சன்வில்லியில் உள்ளது. தனது பெற்றோருடன் அவர் வசித்து வந்தார். 

இந்த வெறிச் செயலில் ஈடுபடுவதற்கு முன்பு தனது தந்தைக்கு "எனது கம்ப்யூட்டரைப் பாருங்கள்" என்று மெசேஜ் அனுப்பியுள்ளார் கொலைகார நபர். அவர் கம்ப்யூட்டரைப் பார்த்தபோது, அதில் தான் செய்யப் போகும் காரியம் குறித்து அதில் விவரித்திருந்தார் அந்த நபர். இதையடுத்து தந்தை காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார்.

காவல்துறையினர் விரைந்து சுதாரிப்பதற்குள் தனது கொலை வெறி ஆட்டத்தை நடத்தி முடித்து விட்டு, தானும் மாண்டு போய் விட்டார் அந்த இளைஞர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்