பெங்களூரு: கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் 3வது தமிழ்ப் புத்தகத் திருவிழா பெங்களூரு நகரில் இன்று தொடங்கி வருகிற 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
2022ம் ஆண்டு முதலாவது தமிழ்ப் புத்தகத் திருவிழாவை, கர்நாடக தமிழ்ப் பத்திரிகையாளர்கள் சங்கம் நடத்தியது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 2வது திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் இன்னும் விரிவான ஏற்பாடுகளுடன், இந்த வருடம் 3வது தமிழ்ப் புத்தகத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று அது தொடங்கியுள்ளது. வருகிற 29ம் தேதி வரை அதாவது 10 நாட்கள் இந்த விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.
பெங்களூரு, டாக்டர் அம்பேத்கர் சாலை, இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகம் எதிரில் உள்ள தி இன்ஸ்டிடியூஷன் ஆப் என்ஜீனியர்ஸ் அமைப்பின் வளாகத்தில் இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது.
இந்தாண்டு கண்காட்சியில் கிட்டத்தட்ட 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கத் திட்டமிடப்பட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பழைய புத்தகங்களைக் கொடுக்கும் புதிய நடைமுறையும் இந்த கண்காட்சியில் அறிமுகப்படுத்துகிறார்கள். அதாவது நீங்கள் படித்து விட்டு வீட்டில் வைத்திருக்கும் பழைய புத்தகங்கள் நல்ல நிலையில் இருந்தால் அதை இங்கே கொடுக்கலாம். பழைய புத்தகங்களை யாராவது வாங்க விரும்பினால் ரூ. 500 கொடுத்தால் பத்து பழைய புத்தகங்களைக் கொடுப்பார்கள். வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தவே இந்த திட்டமாகும்.
பெங்களூரு குடிநீர் விநியோகம் மற்றும் கழிவு நீரகற்றும் வாரியத் தலைவர் டாக்டர் ராம் பிரசாத் மனோகர் ஐஏஎஸ் அதிகாரியின் வழிகாட்டுதலில் புத்தகக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து டாக்டர் ராம் பிரசாத் மனோகர் கூறுகையில், கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் மற்றும் அதன் தலைவரான முத்துமணி மற்றும் நிர்வாக குழுவின் தலைமையில், பெங்களூருவில் மூன்றாவது ஆண்டு தமிழ் புத்தகத் திருவிழா மிகப்பெரிய அளவில் நடைபெற உள்ளது. இந்த விழா, கர்நாடகாவில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை உற்சாகமாகக் கொண்டாடும் ஒரு மாபெரும் களமாக அமையும்.
கடந்த இரண்டு புத்தகத் திருவிழாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த இவர், இளம் தலைமுறைக்கு தமிழ் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் 3000 மாணவர்களுக்கு இலவச புத்தகக் கூப்பன்கள் வழங்கியுள்ளார். மேலும் இந்த ஆண்டு 1000 மாணவர்களுக்கு இலவச புத்தகக் கூப்பன்கள் வழங்க உள்ளார். இது மாணவர்களை புத்தக வாசிப்புக்கு ஊக்குவிப்பதோடு, தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை மேம்படுத்த அவர்களுக்கு உற்சாகம் தரும் வாய்ப்பாகவும் அமையும் என்று தெரிவித்துள்ளார்.
புத்தகக் கண்காட்டசியில் பல்வேறு புதிய புத்தக வெளியீடுகள், புத்தக மதிப்புரைகள், இலக்கிய மாலை, எழுத்தாளர் சந்திப்பு, பெருந்தலைவர் விருதுகள், இலக்கிய போட்டிகள், இசை நிகழ்ச்சி உள்ளிட்டவையும் இடம் பெறுகின்றன.
28 மாநிலங்களில் இருந்து 1 லட்சம் புத்தகங்கள் மற்றும் 20,000+ பங்கேற்பாளர்கள். ஒவ்வொரு நாளும் சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சி மற்றும் விற்பனை தினசரி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். அனைத்துப் புத்தகங்களுக்கும் பத்து சதவீத கழிவும் உண்டு.
புத்தகக் கண்காட்சி தொடர்பான மேலும் விவரங்களை அறிய இமெயில் - tamilbookfestivalblr@gmail.com
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
{{comments.comment}}