விடாராவுக்கு டஃப் கொடுக்கும் மாருதி ஜிம்னி.. 5 டோர் எஸ்யுவி அதிரடி அறிமுகம்!

Jun 07, 2023,03:13 PM IST

மும்பை: மாருதி  நிறுவனம் புதிய 5 டோர் ஜிம்னி எஸ்யுவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

மாருதி நிறுவனத்தின் படைப்புகளுக்கு இந்தியாவில் நல்ல கிராக்கி உள்ளது. மாருதியின் எல்லா வகை கார்களுக்கும் எப்போதும் நல்ல டிமாண்ட் இருக்கும். இந்திய சாலைகளுக்கு ஏற்ற கார் மாருதிதான் என்பது பலரது கருத்தாகும்.



இந்த நிலையில் மாருதியிலிருந்து புதிதாக ஜிம்னி என்ற எஸ்யுவி வகை கார் அறிமுகமாகியுள்ளது. 6 வகையான வேரியன்ட்டுடன் இந்த கார் மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. இதன் எக்ஸ் ஷோரூம் தொடக்க விலை ரூ. 12.74 லட்சமாகும். ஜிம்னியின் டாப் என்ட் மாடல் ஆல்பா ஏடியின் விலை ரூ. 15.05 லட்சமாகும்.

ஜிம்னி காருக்கு நல்ல டிமாண்ட் ஏற்படும் என்று மாருதி நம்புகிறது. ஏற்கனவே மாருதியிடம் உள்ள கிராண்ட் விதாரா, பிரெஸ்ஸா, பிரான்க்ஸ் ஆகியவற்றை முறியடித்து இது டாப் இடத்தைப் பிடிக்கும் என்றும் மாருதி நம்புகிறது.

ஜிம்னியில் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினாகும்.  மாதம் ரூ. 33,550 தவணைக்கு இந்தக் காரை வாங்கும் வசதியும் கொடுக்கப்படுகிறது. 

ஜிம்னியின் வேரியன்ட் கார்களின் விலை விவரம்:

ஜெட்டா எம்டி - ரூ. 12.74 லட்சம், ஜெட்டா ஏடி - ரூ. 13.94, ஆல்பா எம்டி - ரூ. 13.69 லட்சம், ஆல்பா ஏடி  - ரூ. 14.89 லட்சம்,  (டூயல் டோன்) ஆல்பா எம்டி  - ரூ. 13.85 லட்சம், ஆல்பா ஏடி  - ரூ. 15.05 லட்சம். 

ஜிம்னி கார் உற்பத்திக்காக ரூ. 960 கோடியை முதலீடு செய்துள்ளது மாருதி. உலகம் முழுவதும் ஏற்கனவே 30.2 லட்சம் ஜிம்னி கார்களை சுசுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. தற்போது இந்திய மார்க்கெட்டை இது கலக்கப் போகிறது. ஆனால் இந்தக் காரை உலகம் முழுவதும் 3 டோர் காராக இது விற்று வருகிறது. இந்தியாவில்தான் இது 5 டோர் காராக விற்பனைக்கு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்