சென்னை: வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 14ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய வங்ககடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று வலுப்பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கு கிழக்கே 280 கிலோமீட்டர் தொலைவிலும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு தென்கிழக்கே 230 கிலோமீட்டர் தொலைவிலும் தற்போது நிலை கொண்டுள்ளது.

இது மேலும் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரையான பூரி மற்றும் திகா இடையே கரையை கடக்க உள்ளது. இதன் காரணமாக மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் இன்று முதல் 12 ஆம் தேதி வரை மீனவர்கள் அறிவிக்கப்பட்ட கடப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல் சென்னையில் அருகே உள்ள காமராஜர் துறைமுகம் மற்றும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1ஆம் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் உருவாக வாய்ப்பு இருந்தால் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 14ஆம் தேதி வரை ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது தரைக்காற்று 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மிளகு பொங்கல் வாசம் மிடுக்காய் பரவி வீசும் பலகாய்கறி சாம்பார் படக்கென பசி தூண்டும்!
குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு
Folk song by PS Murugesan: பட்டிக் காட்டு மாமன் என்னை கட்டிக் கொள்ள வா புள்ளே!
பாஸ்போர்ட் என்றால் என்ன.. அதை எப்படி எடுக்கணும்.. மாணவர்களுக்கு சூப்பர் கிளாஸ்!
தேவதை போல் நீ நடந்து.. பட்டுப்புடவை அணிவதன் மகிமை என்னன்னு தெரியுமா?
இந்தக் காதலை மட்டும்...கட்டுப்படுத்த முடியலையே!
உசுரே நீதானே ஒறவாய் வருவேனே..
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்
{{comments.comment}}