டெல்லி: 2022ம் ஆண்டிண்கான 70வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளில் தமிழ் மொழிக்கு மட்டும் ஆறு விருதுகள் கிடைத்துள்ளன. பொன்னியின் செல்வன் 1 மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய 2 படங்களில் இருந்து இந்த விருதுகள் கிடைத்துள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் இந்திய மொழிகளில் வெளிவரும் திரைப்படங்களுக்கு சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படு. அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
2022ம் ஆண்டு தமிழில் வெளிவந்த சிறந்த பொன்னியின் செல்வன் 1 படத்திற்கு கிடைத்துள்ளது. பெரும்பான்மையாக 4 விருதுகள் இப்படத்திற்கு கிடைத்துள்ளது. 2022இல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர் மற்றும் நடிகையர் நடித்திருந்தனர். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார். வரலாற்று காவியத்தை படமாக இயக்கியிருந்தார் இயக்குனர் மணிரத்னம். இப்படம் 2 பாகங்களாக வெளிவந்து பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது.
2022ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதில் பொன்னியின் செல்வன் 1 படத்திற்கு 4 விருதுகள் கிடைத்துள்ளன.
பொன்னியின் செல்வன் 1 படம் பெற்ற விருதுகள்
சிறந்த திரைப்படம்
சிறந்த பின்னணி இசை (ஏ.ஆர்.ரஹ்மான்)
சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்)
சிறந்த ஒலிப்பதிவு (ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி)
திருச்சிற்றம்பலத்திற்கு 2 விருதுகள்
இதே போல 2022ம் ஆண்டு வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன. இப்படத்தில் தனுஷ், நித்யா மேனன் அசத்தலாக நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. ஷோபனா என்ற கேரக்டரில் அட்டகாசமாக நடித்திருந்தார் நித்யா மேனன். சமீபத்தில்தான் பிலிம்பேர் விருதைப் பெற்றிருந்தார் நித்யா மேனன். இப்போது அவரைத் தேடி தேசிய விருதே வந்து விட்டது.
சிறந்த நடிகை- நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)
சிறந்த நடன காட்சிகள் - ஜானி - சதீஷ் (திருச்சிற்றம்பலம்)
'மேகம் கருக்காதா பெண்ணே...பெண்ணே' என்ற பாடலுக்காக சிறந்த நடனத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}