அக்ரா, கானா: கானா நாட்டில் 63 வயசான பூசாரி ஒருவர், 12 வயதேயான சிறுமியை கல்யாணம் செய்து கொண்டுள்ளார். இது அந்த ஊர் மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனாலும் அந்த மதத் தலைவர் அதைக் கண்டு கொள்ளவில்லை. இவர் தலைமை பூசாரியாகவும் இருக்கிறார்.
கானா தலைநகர் அக்ராவுக்கு அருகே உள்ளது நுங்குவா பிராந்தியம். இந்தப் பகுதியில் உள்ள ஒரு இனக் குழுவின் தலைவராக இருந்து வருபவர் நுமோ பார்க்கெட்டி லாவே சுரு. இவருக்கு தற்போது 63 வயதாகிறது. இவர் 12 வயது சிறுமியைக் கல்யாணம் செய்து கொண்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவரை எல்லோரும் கோபோர்பு வுலோமோ என்று அழைப்பார்கள்.. நம்ம ஊர் குலதெய்வம் கோவில்களில் பூசாரிகள் இருப்பார்கள் இல்லையா.. அது போலத்தான் இவரும். நுங்கா பகுதியில் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இவர்தான் தலைமை பூசாரி ஆவார்.
கானாவில் பெண்களுக்கான திருமண வயது 18 ஆகும். ஆனால் இந்த பூசாரி, 12 வயதுப் பெண்ணை கல்யாணம் செய்து அனைவரையும் அதிர வைத்துள்ளார். கிராமத்தைச் சேர்ந்த அந்த பூசாரியின் கல்யாணத்தில் ஊர் மக்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். வெள்ளை நிற உடையில் அந்த சிறுமி உள்ளார். அவரைச் சுற்றிலும் உள்ள பெண்கள், அச்சிறுமியை கேலி செய்தபடி உள்ளனர். புருஷனை மனம் கோணாமல் பார்த்துக்க என்றும் அட்வைஸ் செய்கின்றனர். பார்க்கவே படு மோசமாக இருக்கிறது இந்தக் காட்சிகள்.
சென்ட் அடிச்சுக்கோ.. அப்பத்தான் உன் புருஷனுக்கு உன்னைப் பிடிக்கும் என்றும் ஒரு பெண் கூறுவது வீடியோவில் கேட்கிறது. இந்தத் திருமணம் கானாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் இந்த பூசாரி கலங்கவில்லை, பயப்படவில்லை. மாறாக இவருக்கு ஏகப்பட்ட மதப் பிரிவுகளின் மதத் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து சென்று தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்க போகிறேன்: முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்!
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க.. திமுக கையில் இருக்கும் 4 மேட்டர்!
டிரம்ப் வரியால் விபரீதம்..பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு..2 நாட்களில் ரூ. 9.69 லட்சம் கோடி இழப்பு
அதிரடியாக ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை... சவரன் 76,000த்தை கடந்தது!
திராவிட அரசு பொய்யான, மோசடியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது: அன்புமணி!
கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்: பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!
விஷால்- சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்...பிறந்தநாளில் எளிமையாக நடந்தது
திமுக - தேமுதிக கூட்டணிக்கு வேட்டு வைக்குமா.. தனலட்சுமி சீனிவாசன் கிட்னி முறைகேடு விவகாரம்?
Pillaiyar: விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வந்தது எப்படி?
{{comments.comment}}