செங்கோட்டையில் தோல்வியுற்ற பாதுகாப்பு ஒத்திகை.. குண்டை கண்டுபிடிக்காத போலீஸார் சஸ்பெண்ட்

Aug 06, 2025,10:37 AM IST

டெல்லி: டெல்லி செங்கோட்டையில் நடந்த பாதுகாப்பு ஒத்திகை தோல்வியில் முடிந்தது. போலி வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படாததால் 7 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


அதே நேரத்தில், சட்டவிரோதமாக நுழைய முயன்ற 5 வங்கதேச நாட்டினர் கைது செய்யப்பட்டனர். இந்த இரண்டு சம்பவங்களும் செங்கோட்டையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. சுதந்திர தின விழா நெருங்கி வரும் நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லி செங்கோட்டையில் சமீபத்தில் ஒரு பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. டெல்லி போலீஸ் ஸ்பெஷல் செல் இந்த ஒத்திகையை நடத்தியது. சுதந்திர தினம் நெருங்கி வருவதால், செங்கோட்டையில் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்பதை சோதிப்பதே இதன் நோக்கம்.  காரணம் செங்கோட்டையில்தான் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.




பாதுகாப்பு ஒத்திகையின்போது, ஒரு போலி வெடிகுண்டு வைக்கப்பட்டது. ஆனால், அதை பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் கண்டுபிடிக்கவில்லை. இதனால், அங்கு பணியில் இருந்த 7 காவலர்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. "போலி வெடிகுண்டுடன் வந்த குழு, செங்கோட்டையின் பிரதான வாயிலில் இருந்த பாதுகாப்பை எளிதாக கடந்து சென்றது. அந்த பொருளை கண்டுபிடிக்காதது, பணியில் இருந்தவர்களின் கவனக்குறைவை காட்டுகிறது" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இதுதொடர்பாக உள் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடுகள் என்னென்ன என்று கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா நெருங்கி வருவதால், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


இதற்கிடையில், செங்கோட்டைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 5 வங்கதேச நாட்டினரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் வயது 20 முதல் 25 வரை இருக்கும். அவர்கள் டெல்லியில் கூலி வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. "அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள்" என்று போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து வங்கதேச அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் எதற்காக செங்கோட்டைக்குள் நுழைய முயன்றார்கள் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி.. இன்று இரவுக்குள் கைது?

news

விஜய்க்கு தலைமைத்துவ பண்பே இல்லை.. தவெகவை சரமாரியாக விமர்சித்த ஹைகோர்ட் நீதிபதி செந்தில்குமார்

news

கரூர் சம்பவம்... சிறப்பு புலனாய்வு குழு நியமனம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

news

கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்: கீழடி குறித்த முதல்வர் முக ஸ்டாலினின் நெகிழ்ச்சி பதிவு!

news

இரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பாஜக: முதல்வர் முக ஸ்டாலின் விமர்சனம்

news

தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ்குமாரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

news

கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி... மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

news

210 தொகுதிகளில் அதிமுக வெல்லும்..அதற்கு சாட்சி தருமபுரியில் கூடிய இந்த கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மாளிகை, நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அதிகம் பார்க்கும் செய்திகள்