சென்னை: அதிமுக சார்பில் 3 முறை முதல்வராக இருந்தவரும், மறைந்த ஜெயலலிதாவால் தனது வாரிசாக அடையாளம் காட்டப்பட்டவருமான ஓ.பன்னீர் செல்வம் இன்று திமுகவில் இணைந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ்ஸுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அதிமுக வட்டாரத்தை மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்தையே இந்த செய்தி பரபரக்க வைத்திருக்கிறது. என்ன நடந்தாலும் ஓ.பி.எஸ். திமுக பக்கம் போக மாட்டார் என்ற நம்பிக்கையில் பாஜக, அதிமுக தரப்பில் இருந்து வந்தனர். மற்றவர்களும் கூட அப்படித்தான் நினைத்து வந்தனர். ஆனால் வேறு வழியே இல்லாமல் ஓ.பி.எஸ் இப்போது திமுக பக்கம் வந்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தீவிரமாக அரசியல் செய்ய திமுகவை விட்டால் ஓபிஎஸ்ஸுக்கு வேறு சரியான வழி இல்லை என்பதால் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். இனிமேல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தீவிரமாக ஓ.பி.எஸ் அரசியல் செய்வார் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக இன்று காலை ஓ.பி.எஸ்ஸை அவர் தங்கியிருந்த ஹோட்டலில் வைத்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து இருவரும் ஒரே காரில் அண்ணா அறிவாலயம் வந்து சேர்ந்தனர். அங்கு ஓபிஎஸ்ஸை மூத்த அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்ஆர்கே பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.
திமுக தொடங்கப்பட்ட காலத்திற்குப் பிறகு இதுவரை முதல்வராக இருந்த எந்தத் தலைவரும் திமுகவுக்கு வந்து சேர்ந்ததில்லை. அந்த வகையில் புதிய வரலாறு படைத்துள்ளார் ஓ.பி.எஸ். அதிலும் திமுகவின் பரம எதிரியாக கருதப்படும் அதிமுக சார்பில் முதல்வராக அதுவும் 3 முறை முதல்வராக இருந்தவரான ஓபிஎஸ் திமுகவில் இணைந்திருப்பது இன்னும் ஒரு வரலாறு ஆகும். அந்த வகையில் தமிழக அரசியலில் இன்று புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
North East Monsoon On the way: சென்னை உட்பட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வருகிறார்கள்: அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!
Thentamil தலையங்கம்: எங்க வழி தனி வழி.. அரசியல் கணக்குகளும்.. திமுகவின் புதிய பாதையும்
6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Good Evening Friends... சத்தான சுவையான ராகி அடை செஞ்சு சாப்பிடலாமா?
கத்திரிக்காய் நீல கத்திரிக்காய்.. அதிலிருந்து.. சுட்ட கத்தரிக்காய் கொத்சு!
நவராத்திரி.. சோழர் காலத்தில் அரசு விழா.. நாயக்கர்கள் காலத்தில் 9 நாள் திருவிழா!
சமையல் With ஸ்வர்ணா.. முருங்கைக்கீரை தக்காளி ரசம் .. சூப்பாகவும் குடிக்கலாம்
திடீர் உடல்நலக்குறைவு: இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச மருத்துவமனையில் அனுமதி!
{{comments.comment}}