டெல்லி: 7 மாநிலங்களில் 13 சட்டசபைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி பத்து இடங்களில் வென்றுள்ளது. பாஜகவுக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன. ஒரு இடத்தை சுயேச்சை வென்றுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் நாடு தழுவிய அளவில் நடந்த ஒரு பெரிய தேர்தல் என்பதால் இந்த இடைத் தேர்தலும் முக்கியத்துவம் பெறுகிறது.
மேற்கு வங்காள மாநிலத்தில் 4 தொகுதிகள், இமாச்சல் பிரதேசத்தில் 3, உத்தரகாண்ட் 2, தமிழ்நாடு, பீகார், பஞ்சாப், மத்தியப் பிரதேச மாநிலங்களில் தலா 1 சீட் என ஜூலை 10ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.
மேற்கு வங்காளத்தைப் பொறுத்தவரை 4 தொகுதிகளிலும் திரினமூல் காங்கிரஸ் வென்றுள்ளது. இதில் 3 தொகுதிகளில் கடந்த முறை பாஜக வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வென்ற 3 பாஜக எம்எல்ஏக்களும் பின்னர் திரினமூல் காங்கிரஸுக்குத் தாவி விட்டனர். அந்தத் தொகுதிகளில்தான் தற்போது திரினமூல் காங்கிரஸ் வென்றுள்ளது..
இமாச்சல் பிரதேசத்திலும் காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சுக்விந்தர் சிங் சுக்குவின் மனைவி கம்லேஷ் தாக்கூர் தேரா தொகுதியில் வெற்றி பெற்றார். மற்ற இரு தொகுதிகளில் ஹமீர்பூர் தொகுதியில் பாஜக வென்றுள்ளது. இன்னொரு தொகுதியை காங்கிரஸ் வென்றது.
உத்தரகாண்ட் மாநிலத்தில், மங்களூர், பத்ரிநாத் ஆகிய இரு தொகுதிகளிலும் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவு கிடைத்துள்ளது. இரண்டு தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. அதாவது காங்கிரஸ் வென்றுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து தேர்தல் நடந்த தொகுதியில் சுயேச்சை வெற்றி பெற்றார்.
தமிழ்நாட்டின் விக்கிரவாண்டியில் திமுக அபார வெற்றி பெற்றது. மத்தியப் பிரதேச மாநிலம் அமர்வாரா தொகுதியில் பாஜக வேட்பாளர் கம்லேஷ் ஷா வெற்றி பெற்றார்.
மொத்தம் தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளில் 2 தொகுதியில் மட்டுமே பாஜக வென்றுள்ளது. 10 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றுள்ள நிலையில், ஒரு தொகுதியை சுயேச்சை கைப்பற்றியுள்ளார். இடைத் தேர்தல் நடைபெற்ற 7 மாநிலங்களில் நான்கு மாநிலங்களில் இந்தியா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. 3 மாநிலங்களில் பாஜக அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
இந்தியா கூட்டணி வென்ற தொகுதிகள்
மங்களூர் (காங்கிரஸ்), பத்ரிநாத் (காங்கிரஸ்), தேரா (காங்கிரஸ்), நலகார் (காங்கிரஸ்), ஜலந்தர் மேற்கு (ஆம் ஆத்மி), ரனகாட் தக்சின் (திரினமூல் காங்கிரஸ்), பக்தா (திரினமூல் காங்கிரஸ்), ரெய்காஞ்ச் (திரினமூல் காங்கிரஸ்), மணிகதலா (திரினமூல் காங்கிரஸ்), விக்கிரவாண்டி (திமுக)
பாஜக வென்ற தொகுதிகள்
ஹமீர்பூர், அமர்வரா
ருபாலி (சுயேச்சை)
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}