74வது குடியரசு தின விழா : டில்லி ராஜ்பாத்தில் தேசிய கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு

Jan 26, 2023,09:58 AM IST
டில்லி : நாட்டின் 74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் டில்லியில் உள்ள ராஜபாத்தில் ஜனாதிபதி திரெளபதி மும்மு தேசியக் கொடியை ஏற்றினார். இவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் குடியரசு தினம் இதுவாகும்.



காலை 8 மணிக்கு துவங்கிய குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார். இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி கலந்து கொண்டுள்ளார். இந்திய குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவதும் இதுவே முதல் முறையாகும்.

குடியரசு தின அணிவகுப்புக்கள் ராஜ்பாத் துவங்கி இந்தியா கேட் வரை நடைபெற்றன. குடியரசு தின அணிவகுப்புக்கள் காலை 10.30 மணிக்கு துவங்கி பகல் 12 வரை நடைபெற்றன. இந்த ஆண்டு இந்திய கலாச்சாரம், வீரதீர செயல்கள், ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் குடியரசு தின அணிவகுப்புக்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.  அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி திரெளபதி மும்மு, சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கினார்.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்