சார்லி சாப்ளினின் மகள் நடிகை ஜோசபின் மரணம்

Jul 22, 2023,10:03 AM IST
ஹாலிவுட்: பழம்பெரும் நடிகர் சார்லி சாப்ளினின் மகள் ஜோசபின் சாப்ளின் மரணமடைந்தார். அவருக்கு  வயது 74.

ஹாலிவுட்டை மட்டுமல்லாமல் உலகையே தனது காமெடி நடிப்பாலும், சிந்திக்க வைக்கும் திறமையாலும் கலங்கடித்தவர், கட்டிப் போட்டவர் சார்லி சாப்ளின். இன்றளவும் சாப்ளின் புகழ் மங்காமல் மறையாமல் அப்படியே உள்ளது.



கண்ணீரை மட்டுமே கதையாக கொண்டிருந்த சாப்ளின் தனது அபாரமான நடிப்புத் திறனால் அனைவரையும் வசீகரித்தவர். அவரது மகள்தான் ஜோசபின் சாப்ளின். 74 வயதான அவரும் ஒரு நடிகைதான்.  இவர் பாரீஸில் உள்ள தனது இல்லத்தில் மரணமடைந்தார். 1949ம் ஆண்டு பிறந்தவரான ஜோசபின், சாப்ளினுக்குப் பிறந்த எட்டு குழந்தைகளில் 3வது பிள்ளை ஆவார். மிகவும் இளம் வயதிலேயே தனது தந்தையுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார்.

1952ம் ஆண்டு வெளியான சாப்ளினின் லைம்லைட் படத்தில் ஜோசபினும் நடித்திருப்பார். அதுதான் அவரது முதல் படமாகும். ஜோசபின் சாப்ளினுக்கு, சார்லி, ஆர்தர், ஜூலியன் ரோனட் என மூன்று மகன்கள் உள்ளனர்.  திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிப் படங்களிலும் கூட ஜோசபின் நடித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்