லூதியானாவில் வாயுக் கசிவு.. 9 பேர் பலி.. 10க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Apr 30, 2023,10:56 AM IST
லூதியானா:  பஞ்சாப் மாநிம் லூதியானாவில் ஒரு தொழிற்சாலையில் காஸ் கசிவு ஏற்பட்டதில் 9 பேர் மூச்சுத் திணறி பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

லூதியானாவின் கியாஸ்புரா என்ற இடத்தில் ஒறு தொழிற்சாலை உள்ளது. அங்கிருந்து திடீரென காஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். உடனடியாக தகவல் கிடைத்து டாக்டர்கள், ஆம்புலன்ஸ்கள் விரைந்தனர். பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.




ஆனால் 9 பேர் மூச்சுத் திணறலால் உயிரிழந்துவிட்டனர். 10க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.

என்ன மாதிரியான காஸ் கசிந்தது என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. தொழிற்சாலை அருகில் வசித்து வரும் மக்களும் பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்