92 வயதில் துளிர்த்த காதல்..  மீண்டும் திருமண பந்தத்தில் நுழையும் ரூபர்ட் முர்டோச்

Mar 21, 2023,04:54 PM IST
 சான்பிரான்சிஸ்கோ: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மீடியா ஜாம்பவானான ரூபர்ட் முர்டோச் தனது 92வது வயதில் திருமணம் செய்யவுள்ளார். இது அவருக்கு 5வது கல்யாணமாகும். ஸ்டார் டிவியின் நிறுவனர்தான் ரூபர்ட் முர்டோச்.

ரூபர்ட் முர்டோச் மணக்கவிருப்பது ஆன் லெஸ்லிஸ்மித் என்பவராவார். இவர் சான் பிரான்சிஸ்கோவில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியவர்.

இதுகுறித்து முர்டோச் கூறுகையில், எனக்கு மிகவும் பதட்டமாக உள்ளது. காதலில் மூழ்கியுள்ளேன். எனது கடைசிக்காதல் இதுதான் என்று எனக்குத் தெரியும். ஆனால் இது சிறப்பானதாக இருக்கிறது. நான் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று கூறினார்.



ஆன் லெஸ்லி, செஸ்டர் ஸ்மித் என்பவரின் மனைவி ஆவார். அவர் ஒரு பாடகர். 2008ம் ஆண்டு மறைந்து விட்டார். அதன் பின்னர் சிங்கிளாக இருந்து வந்த ஆன் தற்போது முர்டோச்சுடன் இணையவுள்ளார். தனது புதிய காதல், திருமண பந்தம் குறித்து ஆன் லெஸ்லி கூறுகையில், நான் 14 வருடம் விதவையாக இருந்து வந்தேன். மீடியா மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. இதுதொடர்பாக முர்டோச்சுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த செப்டம்பர் மாதம்தான் இருவரும் சந்தித்தோம். அப்போதே எங்களது காதலை பகிர்ந்து கொண்டோம்.

எனது மறைந்த கணவரும் ஒரு பிசினஸ்மேன்தான். பல்வேறு வகையான தொழில்களை அவர் மேற்கொண்டிருந்தார். மேலும் மீடியா தொழிலிலும் ஈடுபட்டிருந்தார். எனவே முர்டோச்சுடன் பழகுவது எனக்கு சுலபமாக இருந்தது. இருவருக்கும் ஒரே மாதிரியான எண்ணங்களே நிரம்பியிருந்தன. எங்களது மிச்சமுள்ள காலத்தை இருவரும் இணைந்து கழிக்க தீர்மானித்துள்ளோம் என்றார் ஆன் லெஸ்லி.

திருமணத்திற்குப் பின்னர் கலிபோர்னியா, இங்கிலாந்து, மான்டனா, நியூயார்க் என மாறி மாறி வசிக்கப் போகிறார்களாம் இந்தக் காதல் தம்பதிகள்.

முர்டோச்சுக்கு முதல் 3 திருமணங்கள் மூலம் 6 குழந்தைகள் உள்ளனர். முதல் மனைவியான பாட்ரிசியா புக்கருடன் 1956ம் ஆண்டு முதல் 1967 வரை இணைந்து வாழ்ந்தார் முர்டோச். பின்னர் அன்னா மரியா டோர்வ் என்பவரை 1967ல் மணந்து 1999 வரை குடும்பம் நடத்தினார். அவரை விட்டுப் பிரிந்த பின்னர் வென்டி டெங் என்ற பெண்ணுடன் 1999 முதல் 20213 வரை குடும்பம் நடத்தினார். நான்காவது மனைவி பெயர் ஹால். இவருடன் 6 வருடம் குடும்பம் நடத்தினார். 

முர்டோச்சின் சொத்து மதிப்பு 17 பில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. தற்போது பாக்ஸ் நியூஸ், வால்ஸ்ட்ரீட் ஜர்னல் உள்ளிட்ட பல்வேறு மீடியாக்களை இவர் நிர்வகித்து வருகிறார்.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்