97 வயசு.. கொன்று குவித்தது 10,000 பேர்.. நாஜிகளின் முன்னாள் "தாய்க்கிழவி"க்கு தண்டனை!

Dec 31, 2022,08:53 PM IST

பான்: நாஜிகளின் படையில் இடம் பெற்றிருந்த 97 வயதான போர்க்குற்றவாளி பெண்மணிக்கு ஜெர்மனியைச் 
சேர்ந்த நீதிமன்றம் 2 வருட கால சிறைத் தண்டனை விதித்துள்ளது.  இது ரொம்பத் தாமதமான தீர்ப்பு என்று பலரும் குறை கூறியுள்ளனர்.

10,000 பேரைக் கொன்று குவித்த வழக்கில் இவர் மீது வழக்கு நடந்து வந்தது என்பது நினைவிருக்கலாம். 
தற்போது  விதிக்கப்பட்டுள்ள  2 வருட சிறைத் தண்டனையும் கூட சஸ்பெண்ட் செய்து வைக்கப்பட்டுள்ளது.


இந்த போர்க்குற்றவாளியின் பெயர் இர்ம்கார்ட் பர்க்னர். இவர் 1943ம் ஆண்டு முதல் 45 வரையிலான காலகட்டத்தில்,போலந்து நாட்டில் நாஜிக்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஸ்டட்காப் முகாமில் டைப்பிஸ்டாகவும், 
ஸ்டெனோகிராபராகவும் பணியாற்றினார். அந்தசமயத்தில்அந்த முகாமில் அடைக்கப்பட்டிருந்த 10,505 பேர்
 கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில்தான் இர்ம்கார்ட் மீதும் வழக்கு தொடரப்பட்டு 
விசாரணை நடந்து வந்தது.

வடக்கு ஜெர்மனியில் உள்ள இட்ஸோ என்ற இடத்தில் உள்ள கோர்ட் இந்த வழக்கில் இப்போது தண்டனையை அறிவித்துள்ளது. 

குற்றச் சம்பவம் நடந்தபோது இர்ம்கார்ட் பதின் பருவத்தில் இருந்தவர் என்பதால் அவர் மீதான வழக்கு
 பதின்பருவத்தினருக்கான கோர்ட்டில்தான் நடந்து வந்தது. எனவே அவருக்கு தற்போது
 விதிக்கப்பட்டுள்ள தண்டனயைும் அதற்கேற்பவே கொடுக்கப்பட்டுள்ளதாக கோர்ட் தெரிவித்துள்ளது.
இர்ம்கார்ட் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்து வந்தார். கடந்த ஆண்டுதான் அவர் போலீஸாரிடம் சிக்கினார்.

 அவர் பணியாற்றிய ஸ்டட்கார்ப் முகாமில் யூதர்கள் அல்லாத போலந்துக்காரர்களும், கணிசமான யூதர்களும்,
 பால்டிக் நாடுகளைச் சேர்ந்த பிற போர்க்கைதிகளும் என லட்சக்கணக்கானோர் அடைக்கப்பட்டிருந்தனர். 
இதில் 60,000க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். இவர்களில் 10,000க்கும் மேற்பட்டோர் 
நாஜிப் படையினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

Tatkal ticket Booking: கடைசி நிமிட டிக்கெட்டுக்கு இனி 'ஒற்றை சாவி' - ஓ.டி.பி கட்டாயம்

news

Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!

news

பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்