சேலம்: சேலத்தில் பள்ளி பேருந்தில் இடம் பிடிப்பது தொடர்பாக 2 மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி மெயின் ரோட்டில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். வழக்கம் போல் நேற்று பள்ளி முடிந்து மாணவர்கள் பள்ளி பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது, 9ம் வகுப்பு படிக்கும் சரவணன் மற்றும் கந்தகுரு என்ற இரண்டு மாணவர்களிடையே பேருந்தில் இடம் பிடிப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் சரவணனை கந்தகுரு பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. சரவணனுக்கு மார்பு பகுதியில் பலமாக அடி விழுந்ததால் , ரயிலே ஊழியர் கணபதியின் மகன் சரவணன் உயிரிழந்துள்ளார். மயங்கி விழுந்த சரவணனை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி சரவணன் உயிரிழந்துள்ளான்.
தனியார் பள்ளி வாகனத்தில் இருக்கை பிடிப்பது தொடர்பான இரு மாணவர்களுக்கே ஏற்பட்ட மோதல் காரணமாக மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்திய பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவருக்கு ஏற்கனவே உடல் நலப்பிரச்சனை இருந்ததாக கூறப்பட்டதால், தற்போது வரை வழக்கு பதிவு செய்யாமல் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடப்பாடி போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒற்றைக் கொம்போனே.. ஓர்கணிக்கு அம்மையப்பனை சுற்றி வந்து பெற்றவனே!
எலிகள் செய்யும் பூஜை.. விநாயகரின் செம டான்ஸ்.. ஏஐயில் கலக்கும் பிள்ளையார் வீடியோக்கள்!
காதலிப்பதாக இருந்தால்.. இதயம் முரளி மாதிரி இருக்காதீங்க.. சீனத்து லியூ போல போட்டு உடைச்சிருங்க!
பிள்ளையாரை வழிபட சிறந்த நைவேத்தியங்கள் என்னென்ன.. விநாயகர் சதுர்த்தி சிறப்புகள்
அன்புள்ள அம்மா.. அருமையான அப்பா!
ஜம்மு காஷ்மீரை உலுக்கி எடுத்த கன மழை.. வைஷ்ணவ தேவி கோவிலுக்குச் சென்ற 5 பக்தர்கள் பலி
தமிழ்நாட்டில் நாளை முதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
விஜய் வேஷம் கலைந்து விட்டது... விரைவில் காலி பெருங்காய டப்பா போல் ஆகி விடுவார்: அமைச்சர் சேகர்பாபு
திமுக-அதிமுக...எத்தனை இடங்களில் போட்டியிட்டால்.. கூட்டணி ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்கலாம்?
{{comments.comment}}