"அம்மா" குடிநீருக்கு டாட்டா.. வருகிறது "ஆவின் குடிநீர்".. தினசரி 1 லட்சம் பாட்டில்கள் விற்க இலக்கு!

May 21, 2023,02:23 PM IST
சென்னை: அம்மா குடிநீர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. விரைவில் ஆவின் நிறுவனம் மூலம் குடிநீர் பாட்டில்களை விற்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அம்மா உணவகம், அம்மா குடிநீர் என பல்வேறு வகையான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. கிட்டத்தட்ட எல்லாமே மக்களின் ஆதரவையும், வரவேற்பையும் பெற்றன. குறிப்பாக அம்மா உணவகத்திற்கும், அம்மா குடிநீர் பாட்டில்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அம்மா உணவகங்கள் ஏழை எளிய கூலித் தொழிலாளர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. இந்தத் திட்டம் பல்வேறு மாநிலங்களையும் கூட ஈர்த்து பல மாநிலங்களில் இதேபோன்ற உணவகங்களும் தொடங்கப்பட்டன. தற்போது வரை அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. அதேசமயம், அம்மா குடிநீர் திட்டம் தற்போது சுத்தமாக அமலில் இல்லை. எங்குமே அம்மா குடிநீர் விற்பனையில் இல்லை.




இந்தச் சூழ்நிலையில் தற்போது புதிதாக ஆவின் நிறுவனம் குடிநீர் விற்பனையில் இறங்கவுள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்தின் விற்பனை நிலையங்கள் மூலமாக இந்த ஆவின் குடிநீர் விற்பனை செய்யப்படவுள்ளது. ஒரு நாளைக்கு ஒன்று முதல் 1.5 லட்சம்  குடிநீர் பாட்டில்களை விற்க ஆவின் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளியும் வெளியிடப்பட்டுள்ளது.

சா.மு.நாசர் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோதே இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்ட அமலாக்கம் தாமதமாகி வந்தது. தற்போது மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராகியுள்ள நிலையில்  இத்திட்டம் வேகம் பிடித்துள்ளது. விரைவில் டெண்டர் முடிவான பின்னர் இந்தத் திட்டம் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

தமிழ்நாட்டில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. ஆவின் பால் கோவா, ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன. ஆவின் பால் நல்ல தரத்துடன் பொதுமக்களின் வரவேற்பைப் பெற்று விற்பனையாகி வருகிறது. அந்த வரிசையில் ஆவின் குடிநீரும் இணையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சமீபத்திய செய்திகள்

news

Tatkal ticket Booking: கடைசி நிமிட டிக்கெட்டுக்கு இனி 'ஒற்றை சாவி' - ஓ.டி.பி கட்டாயம்

news

Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!

news

பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்