பழம்பெரும் நடிகர் சரத்பாபு காலமானார்!

May 22, 2023,03:16 PM IST

ஐதராபாத் : தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகரான  சரத்பாபு, உடல்நலக்குறைவால் இன்று (மே 22) காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில வாரங்களாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


71 வயதாகும் சரத்பாபுவிற்கு சிறுநீரகம், கல்லீரல், நுழையீரல் ஆகியன பாதிக்கப்பட்டிருந்தது. இதற்காக அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். சமீபத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக சோஷியல் மீடியாவில் வதந்திகள் பரவின. ஆனால் அவர் நலமுடன் இருப்பதாகவும், தொடர் சிகிச்சையில் இருக்கும் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் எனவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டிருந்தனர். 




ஆனால் அவர்கள் நம்பிக்கை தெரிவித்த சில நாட்களிலேயே சரத்பாபு உயிரிழந்திருப்பது ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஐதராபாத்தில் இருந்து அவரது உடலை சென்னை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அவரது இறுதிச் சடங்குகள் சென்னையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ், செலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார் சரத்பாபு. தெலுங்கில் ராம ராஜ்யம் என்ற படத்தின் மூலம் 1973 ம் ஆண்டும், 1977 ல் தமிழில் பட்டின பிரவேசம் என்ற படத்தின் மூலமும் அறிமுகமானார்.  தெலுங்கை விட தமிழில் அதிக படங்களில் குணசித்திர நடிகராகவும், வில்லன் ரோலிலும் நடித்துள்ளார். 


நினைத்தாலே இனிக்கும், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கம், சட்டம், சிப்பிக்குள் முத்து, வேலைக்காரன், சங்கர் குரு, அண்ணாமலை, நாளைய தீர்ப்பு, வேடன், கேப்டன், டூயட், முத்து, பாபா, புதிய கீதை, பேரரசு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2023 ம் ஆண்டில் தமிழில் வசந்த முல்லை என்ற படத்திலும், தெலுங்கில் மல்லி பெல்லி என்ற படத்திலும் நடித்தார்.  ரஜினி, கமல் ஆகியோரின் நண்பனாக இவர் நடித்த படங்களின் பட்டியல் மிக நீளமானது. 


இவர்கள் தவிர விஜயகாந்த், விஜய் என டாப் ஹீரோக்கள் அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார் சரத்பாபு.

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!

news

கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்