எனக்குப் பிடிச்ச தமிழ் நடிகர் யார்  தெரியுமா.. ஸ்வீட் டிவீட் போட்ட சோனு சூத்!

Jun 27, 2023,09:39 AM IST
மும்பை: நடிகர்களிலேயே மிகவும் வித்தியாசமானவர்கள் வில்லன் நடிகர்கள்தான். உண்மையில் இந்த வில்லன் நடிகர்களிடம் இருக்கும் நிஜமான முகங்கள், பெரும்பாலான ஹீரோக்களுக்குக் கிடையாது. அந்த வித்தியாசமானவர்கள் லிஸ்ட்டில் வருபவர்தான் சோனு சூத்.

பாலிவுட்டைச் சேர்ந்த சோனு சூத், இந்திப் படங்களில் நடித்ததை விட தென்னிந்திய மொழிப் படங்களில்தான் நிறைய நடித்துள்ளார். குறிப்பாக நிறைய தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். கள்ளழகர் படம்தான் அவரது முதல் தமிழ்ப் படம். அதில் ஒரு பூசாரி வேடத்தில் வந்து அசத்தியிருப்பார். அதன் பிறகு நெஞ்சினிலே படத்தில் நடித்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும் அவருக்குப் பெரிய பிரேக் கொடுத்த படம் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் வந்த வேடத்திற்குத்தான்.



அதில் ரஜினியுடன் மோதும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சோனு சூத். அந்த கதாபாத்திரம் அவருக்கு நிறைய பெயரைப் பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகுதான் அவர் மளமளவென உயரத் தொடங்கினார். தெலுங்கில் நிறையப் படங்கள் கிடைக்கவே அங்கு கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

தெலுங்குப் பக்கம் ஓடிக் கொண்டிருந்த அவரை சிம்புதான் தனது ஒஸ்தி படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்குக் கூட்டி வந்தார். இந்தப் படமும் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது. ஆனாலும் மீண்டும் அவர் தெலுங்கு, இந்தி என்றே ஒதுங்கி விட்டார். இப்போது அவர் தமிழில் அதிகமாக நடிப்பதில்லை.



ஆனால் தமிழை மறக்காமல் உள்ளார் என்பதை அவரே வெளிப்படுத்தியுள்ளார். டிவிட்டரில் அவரிடம் ஒரு ரசிகர், உங்களுக்குப் பிடித்த தமிழ் நடிகர் யார் என்று கேட்டபோது கொஞ்சமும் தயங்காமல் விஜயகாந்த் சார் என்று கூறியுள்ளார். அவர்தான் எனக்கு சினிமாவில் கள்ளழகர் படம் மூலம் பிரேக் கொடுத்தவர் என்று நன்றியுடன் நெகிழ்ந்துள்ளார் சோனு சூத்.

சோனுவின் இந்த டிவீட்டுக்கு விஜயகாந்த் ரசிகர்கள் மட்டுமல்லாமல், தமிழ் சினிமா ரசிகர்களும் கூட மகிழ்ச்சியாக பாராட்டும், வாழ்த்தும், நெகிழ்ச்சியும் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்