நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்.. ஆதிபுருஷ் படத்துக்கு சிவசேனா கடும் எதிர்ப்பு!

Jun 17, 2023,03:53 PM IST
டெல்லி: ஆதிபுருஷ் படம் கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. படம் சரியாக இல்லை என்பது ஒரு பக்கம் இருக்கும் நிலையில் அப்படத்தில் இடம் பெற்ற வசனங்களுக்காக நாட்டு மக்களிடம் ஆதிபுருஷ் படக் குழுவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி வலியுறுத்தியள்ளது.

உத்தவ் தாக்கரே சிவசேனாவைச் சேர்ந்த எம்.பி. பிரியங்கா சதுர்வேதி இதுகுறித்துக் கூறுகையில், ஆதிபுருஷ் படத்தில் இடம் பெறும் வசனங்கள் மிகவும் கண்டனத்துக்குரியவை. இந்து மதத்தின் புராணமான ராமாயணத்துக்கு அவமரியாதை செய்வது போல இந்த வசனங்கள் உள்ளன. குறிப்பாக அனுமான் பேசும் வசனங்கள் கடும் கொதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.



இப்படத்தின் இயக்குநர் ஓம் ராவத், வசனகர்த்தா மனோஜ்முன்டாசிர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.  நாம் காலம் காலமாக வழிபட்டு வரும் கடவுள்களை பொழுதுபோக்கு என்ற பெயரில் இப்படி அவமதித்திருப்பது வருத்தத்திற்குரியது, கண்டனத்துக்குரியது. படத்துக்காக கடவுளை அவமதிப்பதை ஏற்கவே முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

ஆதிபுருஷ் படத்தின் ஸ்டில்கள் வெளியானது முதலே அது சர்ச்சையைக் கிளப்பி வந்தது. படத்தின் ஹீரோவான பிரபாஸ் பார்க்க ராமர் போலவே இல்லை, காமெடியாக இருக்கிறது என்று பலரும் கிண்டலடித்து வந்தனர். அதேபோல பிற கேரக்டர்களும் விமர்சனத்துக்குள்ளாகின. இந்த நிலையில் நேற்று இப்படம் திரைக்கு வந்தது. ஆனால் இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்ப்பும், அதிருப்தியும் தற்போது கிளம்பியுள்ளன. பெரும்பாலான தியேட்டர்களில் கூட்டமே இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன. 

ரூ. 500 கோடியில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் தரமற்றவையாக இருப்பதாகவும் குமுறல் வெடித்துள்ளது. வசனங்களும் கூட கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளன. ராமர் வேடத்தில் பிரபாஸ், சீதை வேடத்தில் கிருத்தி சனோனன், ராவணன் வேடத்தில் சைப் அலி கான் நடித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்